ஆசையாக டிரஸ் வாங்கி கொடுத்த பாக்கியாவை பணக்காரினு காட்ட டிரஸ் வாங்கி இருக்கியா என கேட்கிறார் கோபி.

Baakiyalakshmi Episode Update 24.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்கியா வீட்டில் உள்ள அனைவருக்கும் டிரஸ் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைகிறார். இனியா அப்பா டிரஸ் வாங்கி கொடுக்க சொன்னார் அப்போ நான் வருவேன் என சொல்ல எங்கப்பா இருக்கு பிசினஸ்ல ஏற்கனவே பிரச்சனை இன்னும் அவர் வேற வாங்கி தரணுமா என பாக்கியா சொல்ல ஈஸ்வரி அவன் அப்படி ஒன்னும் கஷ்டத்துல இல்லை என கூறுகிறார்.

திருப்பதி கோவிலுக்கு, பக்தர்கள் அச்சமின்றி வரலாம் : தேவஸ்தானம் அறிவிப்பு

அதன் பிறகு என்னை உனக்கு வாங்கிக்கலையா என கேட்க என்கிட்ட நிறைய புடவை இருக்கு என அவர் கூறுகிறார். மேலும் இனியாவுக்கு நான் டிரஸ் வாங்கி தருகிறேன் என சொல்கிறார்.

இந்தப் பக்கம் கோபி ராதிகா வீட்டிற்கு டிரஸ் வாங்கிக் கொண்டு செல்கிறார். மய்யூ மற்றும் ராதிகாவிடம் உடைகளை கொடுக்கிறார். மய்யூ உங்களுக்கு வாங்கிகலையா என கேட்க எனக்கு எதுக்கு எனக் கூறுகிறார். வீட்ல இருக்குற உங்களுக்கும் எடுத்துக் கொடுத்தேன் எனக்கு எடுத்துக்கல என சொல்கிறார். ராதிகா நான் வாங்கித் தருகிறேன் எனக் கூறுகிறார். எனக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்க யாருமில்லை என போலி நாடகம் போடுகிறார் கோபி.

ஒழுங்கா படம் எடுத்து இருந்தா…நான் ஏன் தப்பா Review சொல்ல போறேன் – Blue Sattai Maran Bold Speech

வீட்டிற்கு வந்த கோபி ரூமில் இருக்கும் போது பாக்கியா கையில் டிரெஸ் எடுத்துக் கொண்டு சென்று உங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன் என கூறுகிறார். என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம் என பாக்கியம் சொல்ல இந்த ட்விஸ்ட் காம்பிடிஷன் தேவையில்லை விஷயத்துக்கு வா என கூறுகிறார். பிறகு பாக்கியா உங்களுக்கு ஷர்ட் வாங்கியதாக சொல்லிக் கொடுக்கிறார். நான் இன்னும் பணமே கொடுக்கலையே என கேட்க பாக்கியா என்னிடம் இருந்த பணத்தில் வாங்கியதாக கூறுகிறார்.

உடனே கோபி ஓ நீ தான் பிசினஸ் பண்றல.. அதுவும் இல்லாம உங்க மாமனார் உன் பேர்ல எல்லா சொத்தையும் எழுதி வைத்துவிட்டார் நீ இப்போ பணக்காரி என்று காட்ட வீட்ல இருக்க எல்லோருக்கும் கட்டத்தை எடுத்துக் கொடுத்து இருக்கியா. அப்பா எதுக்கு உன் மேல சொத்து எழுதினார் என கேட்க எனக்கு எப்படி தெரியும் என பாக்கியா சொல்கிறார். முகத்தை அப்பாவி மாதிரி வச்சுகிட்டு எல்லாத்தையும் சாதித்துவிட்டு எனக்கு எப்படி தெரியும்னு நாடகம் போடாத என கூறுகிறார். எனக்கு யாருடைய சொத்தும் வேண்டாம் அதற்கு அவசியமும் இல்லை என பாக்கியா சொல்கிறார். எல்லோருக்கும் டிரஸ் வாங்கும் போது உங்களுக்கும் வாங்கனும்னு தோணுச்சு வாங்கினேன் புடிச்சிருந்தா போட்டுக்கங்க இல்லன்னா விடுங்கள் என வருத்தத்தோடு கூறிவிட்டு வெளியே செல்கிறார் பாக்யா. வெளியே வந்த இவர் இவர் எப்போ நல்லா இருப்பாரு எப்போ சிடுசிடுனு இருப்பார்னு புரிஞ்சுக்க முடியல. உன்ன பார்த்தா தான் அவருக்கு பிடிக்காது இல்ல அப்புறம் திரும்பத் திரும்ப அவர் முன்னாடி போய் நிற்கிற என தன்னைத்தானே திட்டிக் கொள்கிறார்.

இந்த பக்கம் செழியன் போனில் பேசிக் கொண்டு மாடிக்குச் செல்லும் போது ஜெனி மேலே இருந்து கீழே இறங்குகிறார். அவரை கீழே இறங்க விடாமல் வழிமறித்து மேலே கூட்டிச் செல்கிறார். எனக்கு நிறைய வேலை இருக்கு என ஜெனி செழியனை வெறுப்பேற்றுகிறார். பிறகு என்கிட்ட பேசின சொல்லும்போது நீ இப்படித்தான வேலை இருக்குன்னு சொல்லுவ என சொல்ல கள்ளி இவ்வளவு நேரம் என்கிட்ட விளையாடினியா என செழியன் ஜெனியை கட்டிபிடித்தார். இந்த நேரத்தில் மாடியில் இருந்து கீழே இறங்குகிறார் எழில்.

உடனே இந்த வீட்டில சின்ன பையன் நான் இருக்கேன். உங்களுக்குத்தான் ரூம் கொடுத்து இருக்காங்கல, எதுவாயிருந்தாலும் உள்ள வெச்சுக்கங்க என கூறுகிறார். பிறகு எழில் கிண்டல் அடித்து விட்டு கீழே இறங்குகிறார்.

இந்த பக்கம் பாக்கியா தீபாவளி பலகாரங்களை செய்ய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும்போதே இருவர் வந்து வேலை கேட்கின்றனர். பிறகு அவர்களின் உதவியோடு பாக்கியா பலகாரங்களை பேக் செய்கிறார். அதனை அவரது மாமனார் டெலிவரி தெரிந்ததாக சொல்ல நாங்க பார்த்துக்கிறோம் மாமா என கூறுகிறார். செல்வி இந்த சாக்குலயாவது நாங்க வெளிய போயிட்டு வரோம் என சொல்ல பாக்கியா சிரிக்கிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.