கோபியின் முகத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கான செக்கை விட்டெறிந்துள்ளார் பாக்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் கோபி ஜெனி அழைத்ததால் வீட்டுக்கு வந்து என்னம்மா என்னாச்சு என கேட்க ஈஸ்வரி நீ கோபியை வர சொன்னியா எதுக்கு என கேட்க நான் தான் வர சொன்னேன் என கிச்சனிலிருந்து குரல் கொடுத்து வெளியே வருகிறார் பாக்யா.

அதன் பிறகு கோபி நீ வர சொன்னியா இதுக்கு என்ன விஷயம் போன்ல சொல்ல வேண்டியது தானே என கேட்க ஒரு நிமிஷம் என சொல்லி எழிலையும் கீழே வரச் சொல்லி கிச்சனுக்கு சென்று செக் புக்கை எடுத்து வந்து உங்களுக்கு தர வேண்டிய 20 லட்சத்துல 2 லட்சத்துக்கான செக் என சொல்லி நீட்ட கோபி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

என்ன வெறும் செக்க கொடுத்து சீன் போடுறியா என்ன கோபி கேட்க எனக்கு பணம் வந்ததுக்கப்புறம் தான் உங்களுக்கு போன் பண்ணி வர சொன்னேன் என ஷாக் கொடுக்கிறார். ஈஸ்வரி உனக்கு ஏது அவ்வளவு பணம் என கேட்க உங்களுக்கே தெரியும் எட்டு நாளா தொடர்ந்து சமையல் ஆர்டர் எடுத்து சமைச்சிகிட்டு இருந்தேன் அதுல வந்த பணம்தான் இது என கூறுகிறார்.

ஜெனியும் ஆமா எல்லாருக்கும் கொடுக்க வேண்டிய பணம் போக ஆண்ட்டிகிட்ட இவ்வளவு பணம் இருக்கு என சொல்ல கோபி அதிர்ச்சி அடைந்து செக்கை வாங்கிக் கொண்டு வெளியேறுகிறார். வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் செக்கை கொடுத்து அந்த இடியட் கொடுத்தா என சொல்ல அவங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என கேட்கிறார் ராதிகா.

ஏதோ கேட்டரிங் ஆர்டர் எடுத்து பண்ணாலாம், அது எப்படி ராதிகா இவ்வளவு நாளா பிசினஸ் பண்ற நம்மளால இவ்வளவு சாட் பீரியட்ல 2 லட்சம் லாபம் பார்க்க முடியாது, ஐடில வேலை பாக்குற நீயே ரெண்டு லட்சம் சம்பாதிக்க இரண்டு மாதம் வேலை செய்யணும் அப்படி இருக்கும்போது எப்படி வெறும் 8 நல்ல இவ்வளவு லாபம் பார்க்க முடியும் என்ன பேச ராதிகாவுக்கு கோபம் வருகிறது.

என்ன அந்த சமையல் வேலை செய்றவங்களோட எதுக்கு கம்பேர் பண்றீங்க என சத்தம் போடுகிறார். பிறகு கோபி நான் கம்பேர் பண்ணல மனசுல தோன்றத பிராங்க்கா பேசினேன் அவ்வளவுதான் என சொல்லிக் கொண்டிருக்க அங்கு வரும் ராமமூர்த்தி என்ன வயித்து எரிச்சலா இருக்கா? நம்மகிட்ட சவால் விட்டவ வெறும் ரெண்டே வாரத்துல ரெண்டு லட்ச ரூபா பணத்தை கொடுக்கிறாள் என்று ஆச்சரியமா இருக்கா? என கேட்க கோபி அதெல்லாம் இல்லை என சமாளிக்கிறார்.

உனக்கு தேவை பணம் தானே அப்புறம் என்ன வாங்கிட்டு சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே ஆனால் அந்த சந்தோஷம் முகத்துல தெரியலையே நம்ம விட்ட சவால்ல ஜெயிச்சிடுவாள் என்ற பயம் தான் தெரியுது என சொல்ல கோபி ராதிகாவை கூட்டிக்கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

அடுத்து நிலா பாப்பா விளையாடிக்கொண்டே ஈஸ்வரி ரூமுக்கு சென்று பாட்டி பாட்டி என ஈஸ்வரியை தூக்கத்திலிருந்து எழுப்பி முத்தம் கொடுப்பது என சேட்டை செய்ய ஈஸ்வரி எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். பிறகு செல்வி அங்கு வர ஈஸ்வரி செல்வியை கூப்பிட்டு இந்த குழந்தையை தூக்கிட்டுப் போக என சொல்லி வெளியே அனுப்பி வைக்கிறார்.

பிறகு குழந்தையுடன் வெளியே வந்த செல்வி அமிர்தாவிடம் இந்த குடும்பத்தை சேர்த்து வைக்க நிலா பாப்பாவோட சிரிப்பு ஒன்று போதும் என நடந்த விஷயத்தை சொல்ல அமிர்தா ஆச்சரியப்படுகிறார். அதன் பிறகு கிச்சனில் செல்வி பாக்கியா கோபிக்கு பணத்தை தூக்கி கொடுத்த விஷயத்தை பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க அங்கு வரும் எழில் ஒரு டிவி சேனல்ல வேலைக்கு சேர்ந்திருப்பதாக சொல்ல பாக்யா ஷாக் ஆகிறார்.

படம் பண்றதுக்கு கொஞ்ச நாள் ஆகும் அதுவரைக்கும் சும்மா இருக்க முடியாதுல்ல அதான் வேலைக்கு போகலாம்னு முடிவு எடுத்தேன் என சொல்ல பாக்கியா உன்னுடைய கனவை அப்படியே விட்டுவிட மாட்டல்ல என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌