சமையல் பணம் வந்ததும் பாக்கியா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா, ஜெனி, அமிர்தா, செல்வி என எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது தாத்தா ராமமூர்த்தி வருகிறார்.

வீட்டுக்கு வந்ததும் எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அமிர்தா அவருக்கு காபி போட்டு கொடுக்க அப்போது காபியை குடித்துவிட்டு நன்றாக இருக்கிறது என சொல்ல அங்கு வரும் ஈஸ்வரி ஈடு பாட்டி உங்களுக்கு காபி கொடுக்கவா என கேட்க உன்னை என் முகத்திலேயே முடிக்க கூடாது என்று சொல்லி இருக்கேன், உன் கையால காபி குடிக்கிற நிலைமை வந்தால் நான் இந்த வீட்டிலேயே இருக்க மாட்டேன் என சத்தம் போட்டு விட்டு உள்ளே செல்கிறார்.

அதன் பிறகு ராதிகா ஆபீஸில் அவரது ஹெட் கேன்டீன் ஆர்டரை எடுத்தவர்கள் சரியாக சமைக்காதது பிரச்சனையாக உள்ளது. சாப்பாடு சரியில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் 10 பேருக்கு ஃபுட் பாய்சன் ஆகி இருக்கு, அந்த பாக்கியலட்சுமி கேட்டரிங் சர்வீஸ் ஆர்டர் கொடுத்து இருக்கணும் அவங்க லேடீஸ் எல்லாரும் சேர்ந்து சமைக்கிறாங்க கண்டிப்பா நல்லா சமைப்பாங்க உங்களால தான் அந்த ஆர்டரை அவங்களுக்கு கொடுக்கல என சொல்கிறார்.

உடனே ராதிகா இப்பவும் அவசரப்படாதீங்க மீண்டும் டெண்டர் விடலாம் நல்லவங்களா பார்த்து ஆர்டர் கொடுக்கலாம் என சொல்ல ராதிகாவிடம் உங்களுக்கும் அவங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா ஏன் அவங்க வேண்டாம் என சொல்றீங்க எனக்கு கேட்க ராதிகா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்லி சமாளித்து செல்கிறார்.

பிறகு பாக்யா சமையல் ஆர்டர் எடுத்து சமைத்ததில் மீதி எவ்வளவு பணம் இருக்கு என ஜெனியிடம் கேட்டுக் கொண்டிருக்க ஜெனி கணக்கு பார்த்து மீதி இவ்வளவு இருப்பதாக சொல்ல செக் புக் எங்கே இருக்கு என கேட்டு விசாரிக்கிறார். அதன் பிறகு இங்க மாமாவுக்கு போன் பண்ணி வர சொல்லு என சொல்கிறார்.

மறுபக்கம் கோபி தன்னுடைய நண்பர் செந்திலை சந்தித்து ராதிகாவுடன் நான் சந்தோஷமாத்தான் இருக்கேன் ஆனா குடும்ப செலவு மட்டும் எக்கச்சக்கமாகும் கையில பணம் இல்லை ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்க செந்தில் பணம் நார் தரேன். ஆனா கொஞ்சம் யோசிச்சு பாரு இதுவரைக்கும் நீ வீட்டு செலவுக்காக கடன் வாங்கியது கிடையாது.

இதுக்கு முன்னாடி இருந்தது பெரிய குடும்பம் ஆனால் செலவு கம்மியா தான் இருந்தது இப்போ உன்னோடது சின்ன குடும்பம் தான் ஆனால் செலவு அதிகமாக இருக்கிறது என சொல்லிக் கொண்டிருக்க ஜெனி போன் செய்து வீட்டுக்குப் போகும்போது இங்கே வந்துட்டு போறீங்களா என சொல்ல கோபியும் வருவதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.