ராதிகா அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்க ஈஸ்வரி டிராமா ஒன்றை போட்டுள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியும் ஈஸ்வரியும் சோபாவில் உட்கார்ந்து இருக்க கோபி சரியான வெயில் ரொம்ப அனலா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிற ராதிகாவின் அம்மா காபி கொண்டு வந்து கொடுக்கிறார். கோபிக்கு கொடுத்த பிறகு ஈஸ்வரிக்கும் காபி கொடுக்க அவர் எனக்கு வேண்டாம் என்று சொல்கிறார். கோபி ஏன் நான் உங்களுக்கு காபி குடிக்கலனா தலைவலி வந்துடும் என்று சொல்ல ஏற்கனவே வந்துடுச்சு ஒரு மணி நேரமா டாபிக் கேட்டேன் யாரும் கண்டுக்க கூட இல்லை என்று சொல்கிறார். 

கமலா உங்கம்மா இன்ஸ்டன்ட் காபி எல்லாம் குடிக்க மாட்டாங்க பில்டர் காபி தான் குடிப்பாங்க அதுக்கு பாலை காய்ச்சணும், டிகாஷன் போடணும் நேரமாக தான செய்யும் என்று சொல்கிறார். அதிகமா காபி குடிங்க என்று சொல்லியும் ஈஸ்வரி எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று எழுந்து ரூமுக்கு சென்று விடுகிறார். 

இதைத் தொடர்ந்து மறுபக்கம் எழில் கதை சொல்லிவிட்டு வெளியே வர பாக்கியா அவருக்காக காத்திருக்க எழில் வந்ததும் என்னடா ஆச்சு என்று. தயாரிப்பாளர் கதை ரொம்ப நல்லா இருக்குனு ஓகே சொல்லிட்டாரு என்று சொன்னதும் பாக்யா சந்தோஷப்படுகிறார். நீ கதை சொல்ல வந்தது எனக்கு பயமாகவும் பதட்டமாகவும் அதனால் தான் நான் கிளம்பி வந்துட்டேன் என்று சொல்கிறார். நீ எனக்கு அம்மாவா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் என்று கட்டிப்பிடித்து கண் கலங்குகிறார். பிறகு பாக்கியா என்னடா ஐஸ்கிரீம் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம் அமிர்தா கிட்ட நீயே இந்த நடந்த விஷயத்தை சொல்லு அவ சந்தோஷப்படுவா என்று சொல்கிறார். 

இதையடுத்து கோபி ஹாலில் உட்கார்ந்து போன் பேசிக்கொண்டு இருக்க ராதிகா கொஞ்சம் உள்ள வாங்க உங்க கிட்ட பேசணும் என்று கோபியை ரூமுக்கு அழைத்துச் செல்கிறார். ஏற்கனவே ரூமுக்குள் கமலா இருக்க இருவரும் சேர்ந்து ஈஸ்வரி செய்யும் அட்டூழியங்களை லிஸ்ட் போடுகின்றனர். கோபி அவர்களது புகார்களை கேட்க முடியாமல் இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க என்று கேள்வி கேட்கிறார். 

உங்க அம்மா ரொம்ப டூ மச்சா பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று ராதிகா சொல்ல கமலா ஒரு கர்ப்பிணி பொண்ணு இருக்க வீட்டுல கலைச்சிடு கலைச்சிடுன்னு சொன்னா நல்லாவா இருக்கு? இன்னொரு முறை அப்படி சொன்னா நான் போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் என்று ஷாக் கொடுக்கிறார். பாலை கொட்டி விட்டுட்டு எங்களை துடைக்க சொல்றாங்க என்று சொல்ல கோபி இனிமே ஏதாவது கொட்டுனா என்னை கூப்பிடுங்க நான் துடைக்கிறேன் என சொல்கிறார். அதன் பிறகு கோபி வெளியே வர ஹாலில் இன்று ஈஸ்வரி எல்லாத்தையும் கேட்டது தெரிய வருகிறது. 

உடனே கோபி பதற்றமாக ஈஸ்வரி மயக்கம் போட்டு விடுகிறார்.பயத்தில் என்னம்மா ஆச்சு என்று  ஓடிப்போய் ஈஸ்வரியை மடியில் போட்டு என்ன ஆச்சு என்று கேட்க ராதிகா தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க முகத்தில் தண்ணீர் தெளித்து விடுகின்றனர். 

இதையடுத்து கோபி ஈஸ்வரியை ஹாஸ்பிடலுக்கு கூப்பிட வேண்டாம் கோபி நான் ஏதாச்சு சொன்னா பிரச்சனை தான் வரும் நானே என்னை பாத்துக்கிறேன். காலையிலிருந்து காபி குடுக்கல பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடல அதனாலதான் லோ சுகராகி மயங்கி இருப்பேன் என்று சொல்கிறார். கோபி என்னது இன்னும் சாப்பிடலையா? ராதிகா மற்றும் கமலாவிடம் ஏன் இன்னும் அம்மாவுக்கு சாப்பாடு கொடுக்கல என்று கேட்க கமலா நீங்கள் நாங்களும் யாரும் சாப்பிடல என்று சொல்கிறார்.‌ நம்ம வீட்ல எப்பவும் 9 மணிக்கு தானே சாப்பிடுவோம் உங்க அம்மா 8:30 மணிக்கு எல்லாம் சாப்பிடுவாங்கன்னு எங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார். ஏன் ராதிகாவுக்கு தெரியுமே என்று கோபி கோபப்பட கமலா அவள பாத்துக்கிட்டு அவளால முடியல இதுல உங்க அம்மாவ வேற பார்த்துக்கணுமா என்று கேள்வி கேட்க கோபி நானே போய் சாப்பாடு கொண்டு வரேன் என்று எழுந்து செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.