ராதிகா கடும் கோபமாக இருக்க கோபியின் அப்பா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகா ரூமுக்குள் கோபமாக இருக்க அப்போது அங்கு வரும் கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். இனியாவை நீங்க கூட்டிட்டு வந்ததில்ல ஒரு அர்த்தம் இருக்கு உங்க அப்பா எதுக்கு இங்க வந்தாரு எனக்கு பயமா இருக்கு. மயூ வேற இருக்கா சண்டை ஏதாவது போடப்போறாரு என கோபப்பட அவர் சண்டை போட வரல இனியாவ பார்க்க வந்திருக்காரு. இதுவரைக்கும் எந்த பிரச்சினையும் பண்ணாம அமைதியா தானே இருக்காரு. ஒருவேளை அவர் ஏதாவது பிரச்சனை பண்ணா நான் பார்த்துக்கிறேன் அதுக்கு நான் கேரண்டி என கூறுகிறார்.

கடும் கோபத்தில் ராதிகா.. கோபிக்கு அப்பா கொடுத்த அதிர்ச்சி, இனியா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இருந்தாலும் ராதிகா கோபமாக பேச கோபி அங்கிருந்து வெளியே எழுந்து வந்து விடுகிறார். இந்த பக்கம் ஈஸ்வரி அவர் எதுக்கு அங்க போகணும் இரண்டு பேரையும் இப்பயே நீங்க கூட்டிட்டு வரணும் என சொல்ல செழியன் நான் போய் கூட்டிட்டு வரேன்னு ராதிகா வீட்டுக்கு வருகிறார். கோபி செழியனை பார்த்ததும் உள்ளே அழைக்க நான் இனியாவையும் தாத்தாவையும் கூட்டிட்டு போக வந்தேன் என சொல்ல இனியா நான் வரல எல்லோரும் என்னை திட்டுவாங்க என கூறுகிறார். கோபியும் இனியாவை அனுப்ப முடியாது அவ விருப்பப்பட்டு தான் என் கூட இருக்கா. இனியா இங்கேயே இருக்கட்டும் தாத்தாவை கூட்டிட்டு போ என சொல்ல ராமமூர்த்தி நான் இனியா கூடத்தான் இருப்பேன் என சொல்லி ஷாக் கொடுக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வரும் செழியன் இருவரும் வரமாட்டேன் என்று சொன்ன விஷயத்தை சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார். மன வருத்தத்தில் பாக்யா விடுங்க அத்தை எங்க இருக்கா அவங்க அப்பா கூடத்தான் இருக்கா, அவளுக்கு எங்க இருந்தா சந்தோஷமோ அங்கே இருக்கட்டும் என கூறுகிறார்.

கடும் கோபத்தில் ராதிகா.. கோபிக்கு அப்பா கொடுத்த அதிர்ச்சி, இனியா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து இந்த பக்கம் இனியாவும் தாத்தாவும் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருக்க மயூ வந்து நின்னு பார்க்க தாத்தா மயூவை பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.