கணேஷ் அமிர்தாவை கல்யாண செய்ய போக எழிலுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தா தப்பிக்க முயற்சி செய்ய கணேஷ் மாப்பிள்ளை கோலத்தில் வந்து நிற்க அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
பிறகு கணேஷ் என்ன அமிர்தா பயந்துட்டியா? நான் பக்கத்துல மார்கெட் தான் போயிருந்தேன். நமக்கு கல்யாணம்ல அதனால் தான் பூ மாலை வாங்கிட்டு வர போயிருந்தேன் என்று சொல்கிறார். அதோடு ஐயரையும் கூட்டி வந்து ஷாக் கொடுக்கிறார்.
உடனே அமிர்தா ஐயரிடம் கெஞ்ச கணேஷ் அவரும் கல்யாணம் பண்ணி வைக்காமல் இங்க இருந்து போக முடியாது என சொல்கிறார். மறுபக்கம் பழனிச்சாமியால் கிடைத்த முகவரியை வைத்து கார் ஓனர் வீட்டுக்கு போக அவர்கள் காரை விற்று விட்டதாகவும் எங்களிடம் வாங்கியவரும் விற்று விட்டதாகவும் சொல்கின்றனர். இதனால் எழில் ஏமாற்றம் அடைகிறார்.
இங்கே கணேஷ் துணியை கொடுத்து மாற்றி வர சொல்ல அமிர்தா முடியாது என மறுக்க பளாரென அறை விட்டு எல்லாரையும் கொன்னுடுவேன் என மிரட்டி மாற்ற வைக்கிறார். அடுத்து கல்யாணம் முடிந்ததும் தப்பி செல்ல ஏற்பாடுகளை செய்கிறார்.
பிறகு அமிர்தா கண்ணீருடன் இருக்க கணேஷ் சீக்கிரம் வா என அவசரப்படுகிறார். அமிர்தா வெளியே வந்ததும் பூ வைத்து கொள்ள சொல்லி டார்ச்சர் செய்கிறார். அதன் பிறகு தாலி கட்ட போகும் சமயத்தில் கழுத்தில் மாலை இல்லை என மாலை போட போகிறார்.
அந்த நேரத்தில் எழில் கட்டிய தாலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அதை கழட்ட சொல்லி துன்புறுத்தி தாலியை பிடித்து இழுக்கிறார். இந்த நேரத்தில் பாக்கியா, எழில், செழியன் ஆகியோர் இங்கு வந்து விடுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.