
இனியா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்துள்ளார்.
தமிழ் சின்னத் தலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யா சமைக்கப் போன இடத்தில் லேட்டாக இன்னொரு பக்கம் இனியா ரிசல்ட்க்காக காத்துக் கொண்டிருக்க எல்லோரும் ஆவலோடு இருக்கின்றனர்.
பிறகு பாக்கியா இனியாவுக்கு போன் செய்து வர லேட் ஆகும் என சொல்ல முயற்சி செய்ய போனில் சிக்னல் இல்லாமல் இருக்கிறது. எல்லாரிடமும் போனை வாங்கிப் பார்க்க யாருக்கும் சிக்னல் இல்லை. செல்வி நீ வேணும்னா கிளம்பு அக்கா நாங்க பார்த்துட்டு வருவோம் என சொல்ல பாக்கியா கொஞ்ச நேரம் இருந்துட்டு பந்தி முடிச்சுட்டு போறேன் என சொல்கிறார்.
பத்து மணி ஆனது ரிசல்ட் வர இனியாவின் ரிசல்ட் பார்க்க முயற்சி செய்ய சர்வர் பிரச்சனை காரணமாக ரிசல்ட் வராமல் இருக்க டென்ஷன் அதிகமாகிறது. பிறகு இனியா 600-க்கு 594 மதிப்பெண் எடுத்திருப்பதாக தெரிய வர எல்லோரும் சந்தோஷம் அடைகின்றனர். எழில் ஸ்வீட் வாங்கி கொடுத்து சந்தோஷப்படுகிறார்.
இனியாவும் பாக்யாவுக்கு போன் செய்து ரிசல்ட் பற்றி சொல்ல முயற்சி செய்ய சிக்னல் இல்லாத காரணத்தினால் போன் வராமல் போகிறது. பிறகு இனியாவுக்கு ஸ்கூலில் இருந்து ஃபோன் செய்து ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்திருப்பதாக சொல்லி பெற்றோருடன் உடனடியாக ஸ்கூலுக்கு வர சொல்கின்றனர்.
இனியா இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர் இன்னொரு பக்கம் பாக்யா ஒரே ஒரு முறை போன் பேசிட்டா போதும் என தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
