விவாகரத்தான மறுநாளே ஜெனிக்கு கல்யாணம் என அதிர்ச்சி கொடுக்கிறார் ஜோசப்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி கோபி தொடங்கிய புது பிசினஸில் அமோகமாக வியாபாரம் நடப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். வீட்டுக்கு கிளம்பிய இவர்களை சாப்பிட வைத்து அனுப்பி வைக்கிறார் கோபி.
பிறகு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி இது பற்றியே பேசிக் கொண்டிருக்க வீட்டுக்கு வரும் பாக்கியாவையும் உட்கார வைத்து கோபி புராணம் பாடுகிறார். முதல் நாளே பிசினஸ் அப்படி நடக்குது என பெருமையாக பேசுகிறார்.
ராமமூர்த்தி ஓட்டல் பற்றி கேட்க பாக்கியா பிசினஸ் டல்லா இருப்பதாக சொல்ல ஈஸ்வரி இருவரையும் கம்பேர் செய்து பேச தொடங்குகிறார். அடுத்து செழியன் நீ ஏன் மா அடிக்கடி வீட்டுக்கு வர, அப்புறம் எப்படிமா பிசினஸ் பார்ப்ப என சொல்ல பாக்கியா வீட்டை பத்தி யோசிக்காமல் இருக்க முடியல என தியாகி போல பேசுகிறார்.
மறுபக்கம் பழனிச்சாமி பாக்கியா ரெஸ்டாரன்ட் வர பாக்கியா வீட்டுக்கு போய் இருப்பதாக சொல்ல அவர் உட்கார்ந்து சாப்பிட தொடங்க பாக்கியா வந்து அவருக்கு தண்ணீர் ஊற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.
செல்வியும் அங்கு வர அவர் கோபி பிசினஸ் தொடங்கியது பற்றி சொல்ல பாக்கியா அவர் பிசினஸ் நல்லா போதுனு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க, என் பிசினஸ் டல்லா போகுதுனு சொன்னதும் கம்பேர் பண்ண ஆரம்பித்துட்டாங்க என சொல்ல பழனிச்சாமி பிசினஸ் விஷயத்தை வீட்டில் பேச கூடாது என அட்வைஸ் செய்கிறார்.
அடுத்து கோபி செந்திலை சந்தித்து பேசிக்கொண்டு இருக்க அங்கு ஜோசப் வர எதேச்சையாக இருவரும் சந்திக்க கோபி நலம் விசாரித்து செந்திலுக்கு என்னுடைய சம்மந்தி என அறிமுகம் செய்து வைக்க யாருக்கு யார் சம்மந்தி? கேஸ் முடிந்த மறுநாளே ஜெனிக்கு கல்யாணம். மாப்பிள்ளை எல்லாம் ரெடி என பேரதிர்ச்சி கொடுத்து வெளியேறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.