ராதிகா செக்மேட் வைத்த நிலையில் பாக்கியா முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அம்மா பாக்கியா வீட்டுக்கு வருகிறார்.

அமிர்தாவுக்கு வாழ்க்கை கொடுத்த எழிலுக்கும் பாக்கியா குடும்பத்துக்கும் நன்றி சொல்லி ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி காலில் விழுந்து கண்ணீர் விட்டு நன்றி சொல்லி பிறகு அமிர்தாவின் நகைகள் என சிலவற்றை கொடுக்க எழில் மற்றும் பாக்கியா அதை வாங்க மறுக்கின்றனர். கடைசியில் அந்த நகைகளை ஈஸ்வரி கையில் கொடுத்து விடுகிறார்.

அதன் பிறகு கேண்டீனில் ராதிகா வந்து பாக்கியாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க அப்போது கோட்டீஸ்வரன் வர அவருக்கு சக்கரை பொங்கல் கொடுக்க அவர் ஆஹா ஓஹோன்னு பாராட்டுகிறார். பிறகு ராதிகாவை உட்கார வைத்து காபி கொடுக்க கோட்டீஸ்வரன் சென்றதும் பாக்கியா டீமை சேர்ந்த ஒருவர் புடவை டேபிள் மீது படும்படி வேலை செய்ய ராதிகா 2 நாளில் எல்லோரும் சல்வாரில் யூனிபார்ம் போட வேண்டும், இல்லையென்றால் கேண்டீன் கான்ட்ராக்ட் வாபஸ் வாங்கிடுவேன் என சொல்லி மிரட்டுகிறார்.

பிறகு பாக்கியா இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல எல்லோரும் சுடிதார் போட சொல்ல முதலில் மறுக்கும் பாக்கியா பிறகு சம்மதம் தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.