அமிர்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா நிலா பாப்பாவை தூக்கிக்கொண்டு அந்த வீட்டுக்கு போயிட்டு வரேன் என்ன சொல்ல எழில் அங்கே வேண்டாம் என சொல்ல நான் பார்த்துக்கிறேன் என சொல்லி இனியா குழந்தையை தூக்கி செல்கிறார்.

அங்கு போனதும் இனியா மற்றும் மயூவுடன் நிலா பாப்பா ஜாலியாக விளையாடுகிறது. இனியா நிலா பாப்பாவுக்கு நான் அத்தை வேணும் நீங்க என்ன வேணும் என தாத்தாவிடம் கேட்க நான் கொள்ளு தாத்தா என சொல்கிறார்.

அடுத்து அப்போ அப்பா என்ன வேணும் என கேட்க பையனோட குழந்தை என்றால் தாத்தா வேணும் என ராமமூர்த்தி சொல்கிறார். இதனால் கோபி ஷாக்காக ராதிகா நக்கலாக பார்க்கிறார்.

பிறகு தாத்தா குழந்தையை தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு சந்தோஷமாக கூட்டி வர இதை பார்த்த அமிர்தா சந்தோஷப்படுகிறார். பிறகு அமிர்தா கண்கலங்க ஏன் என எழில் கேட்க எல்லோரும் நிலாவ இப்படி பாத்துப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல அதான் எனக்கு சந்தோஷமா இருக்கு என சொல்ல தாத்தா பெரியவங்க பண்ற தப்புக்கு குழந்தைகள் என்ன பண்ணுவாங்க? என்ன சொல்கிறார்.

பிறகு செழியன் வாக்கிங் சென்று வர எழில் எங்க வாக்கிங்கா என கேட்க செழியன் என்கிட்ட பேசாத என கோபப்படுகிறான். பிறகு அமிர்தா செழியனுக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுக்க அவன் மறுப்பு தெரிவிக்க முடியாமல் வாங்கிக் கொண்டு குடிக்கிறான்.

அடுத்து ஈஸ்வரி தலை வலியில் உட்கார்ந்து இருக்க அமிர்தா காபி போட்டு ஜெனியிடம் கொடுக்க சொல்லிக் கொடுக்க நீங்களே போய் கொடுங்க பாட்டி தனியா இருக்கும்போது கோபப்பட மாட்டாங்க இப்படித்தான் பேசி அவங்களோட மிங்கிளாக முடியும் என சொல்லி அனுப்ப தயக்கத்துடன் வரும் அமிர்தா காபியை கொடுக்க ஈஸ்வரி கோபப்பட்டு தட்டிவிட்டு கப்பை கீழே போட்டு உடைக்கிறார்.

எனக்கு உன்னை புடிக்கல இந்த கல்யாணத்தை நான் ஒரு போதும் ஏத்துக்க மாட்டேன் என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.