ஈஸ்வரியை கவிழ்த்துள்ளார் நிலா பாப்பா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வண்டியில் ஏதோ சத்தம் வருகிறது என பாக்யா எழிலிடம் சொல்லிக்கொண்டிருக்க எழில் அதை மெக்கானிக்கிடம் கொண்டு சென்று காட்டி விட்டு வருவதாக பேசிக் கொண்டிருக்க அப்போது இனியா சரணுடன் சைக்கிளில் வருகிறார்.

அம்மாவையும் அண்ணனையும் பார்த்ததும் இனியா பயந்து நடுங்க சரண் அது உங்க அம்மா தானே என சொல்லி ஹாய் ஆண்ட்டி என குரல் கொடுக்க பாக்யாவும் பதிலுக்கு ஹாய் சொல்ல பிறகு எழிலை அறிமுகம் செய்து வைக்கிறார். இனியா எப்படிணே அம்மா ஒரேடியா மாறிட்டாங்க பொண்ணுங்க கூட பேசினாலே திட்டுவாங்க ஆனா இப்போ பையன் கூட பேசியும் ஒன்னும் சொல்லாம இருக்காங்க என சொல்கிறார்.

அடுத்து சரண் கேன்டீன் திறந்ததற்காக வாழ்த்து சொல்லி ட்ரீட் கேட்க பாக்யா நாளைக்கு வீட்டுக்கு வா, பிரியாணி செய்து வைக்கிறேன் என சொல்கிறார். அடுத்து சரண் அங்கிருந்து கிளம்ப நிலா பாப்பா ஈஸ்வரி ரூமை எட்டிப் பார்க்க ஈஸ்வரி உள்ளே வர சொல்ல நிலா பாப்பாவும் உள்ளே சென்று அவருடன் சேர்ந்து விளையாடுகிறது.

அப்போது அங்கு ராமமூர்த்தி ரூமுக்கு வர நிலா பாப்பா விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறார். இந்த குழந்தை எல்லாரையும் மாத்திடும் என்று சொன்னேன் இப்ப உன்னையும் மாத்திடுச்சு என சொல்ல எனக்கு இன்னமும் கோபம் அப்படியே தான் இருக்கு, குழந்தை மேல கோபத்தை காட்ட முடியுமா என ஈஸ்வரி சொல்கிறார்.

அடுத்து பாக்யா கிளாஸ் ரூம் இருக்கும்போது எல்லோரையும் அவர்களது பேமிலி பற்றி ஆங்கிலத்தில் பேச சொல்ல பாக்கியாவும் பேசுகிறார். எல்லோரைப் பற்றியும் சொன்ன பாக்கியா தன்னுடைய கணவர் பற்றி பேசாத காரணத்தினால் அவரைப் பற்றி கேட்க பாக்யா பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

அடுத்து பழனிச்சாமி எல்லோருக்கும் கேக் கொடுத்து இது தானே செய்தது என சொல்கிறார். அது மட்டுமல்லாமல் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்ற விஷயத்தை சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

பிறகு பாக்யா வீட்டில் நிலா பாப்பா உடன் விளையாடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் அமிர்தா தக்காளி சட்னி அரைக்க ஜெனி நான் அரைக்கிறேன் என சொல்லி வேலை செய்ய அங்கு வரும் செழியன் என்ன அடுப்பு பக்கத்துல நின்னுட்டு இருக்க பாப்பாவுக்கு சுடாதா என பதற செல்வி அதெல்லாம் சுடாது தம்பி என சொல்கிறார். அதன் பிறகு நிலா பாப்பா பெரியப்பா தூக்கு என சொல்லி செழியனிடம் செல்ல முதலில் அமைதியாக இருக்கும் செழியன் அடுத்து நிலாவை தூக்கிக் கொண்டு அங்கிருந்து ஓடி விடுகிறார். நிலா செழியனை கவிழ்த்து சாதனை செய்து விட்டது என ஜெனி சந்தோஷம் அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.