மீண்டும் ராதிகா வீட்டிற்கு கோபி செல்கிறார்.

Baakiyalakshmi Episode Update 14.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் தூங்காமல் படுத்துக் கொண்டிருக்க அவரிடம் என்னடா யாரையாச்சும் லவ் பண்றியா என பாக்கியா கேட்க அவர் அதிர்ச்சியானார். உடனே எழில் அம்மா அப்படி எல்லாம் இல்ல மா என கூறினார். இந்த வயசுல பசங்க சோகமா இருந்தா வேற என்ன காரணம் இருக்க போகிறது லவ் ஃபெயிலியர் ஆ தான் இருக்கும் என கூறுகிறார். பிறகு பாக்கியா சும்மாதான் கேட்டேன் நீ யாரையாச்சும் லவ் பண்ணா என் கிட்ட சொல்ல மாட்டியா என்ன? உன்னால சொல்லாமல் இருக்க முடியாது என கூறுகிறார். அம்மா அதெல்லாம் உன்கிட்ட சொல்ல மாட்டேன் என எழில் கூறுகிறார்.

எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு

பிறகு நான் என்னை நம்பி வரும் பொண்ணை நல்லா பாத்துப்பேனா என எழில் கேட்க அதுல என்னடா உனக்கு சந்தேகம் நீ ரொம்ப நல்லா பாத்துப்ப, உன்ன கட்டிக்க போற பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும். நீ ரொம்ப பொறுப்பான ஆளு. அம்மாவுக்கு ஒரு நல்ல பையன், இனியாவுக்கு நல்ல அண்ணன், செழியனுக்கு ஒரு பிரண்டு மாதிரி, தாத்தா பாட்டிக்கு எதனா ஒன்னு நான் முதல்ல ஓடி வந்து நிப்ப. கவிதா அத்தை கூட உன்ன ரொம்ப பாராட்டி நல்ல பொறுப்பான பையன் என்று சொன்னா என சொல்கிறார். நான் யாருக்காவது ஒரு பிராமிஸ் பண்ணு அதை காப்பாற்றுவேனா என கேட்க நீ சொன்னா சொன்ன மாதிரி செய்வ என கூறுகிறார்.

பிறகு எழில் நான் லவ் பண்ணா என்னமா பண்ணுவ என கேட்க கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் என கூற எழில் அதிர்ச்சி அடைகிறார். இப்ப என்னடா உனக்கு வயசு இன்னும் மூணு நாலு வருஷம் போகட்டும் அதுக்கப்புறம் பண்ணி வைக்கிறேன் என கூறுகிறார். ஓ நீ அப்படி சொல்றியா என எழில் கேட்க ஆமாம் என பாக்கியா கூறுகிறார்.

பிறகு எழில் அமிர்தா வீட்டிற்குச் சென்று அவருடைய அப்பா அம்மாவுடன் பேசுகிறார். அப்போது அமிர்தா குறித்து கேட்க அவர் காலேஜ்க்கு சென்றிருப்பதாக கூறுகின்றனர். பின்னர் காலேஜுக்கு சென்று அமிர்தாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார் எழில். பிறகு அமிர்தா வந்ததும் அவரை நிறுத்தி அவரிடம் இரண்டு நிமிடம் பேச வேண்டும் என கூறுகிறார். உடன் அவரது தோழியும் இருக்கிறார்.

நல்ல கதைக்காக ஏங்கிட்ட இருந்தேன் – உருக்கமாக பேசிய Jai Bhim பிரபலம்

பிறகு எழில் நான் என் மனசுல பட்டதை உங்களிடம் சொன்னேன். உங்களுக்கு புடிச்சிருக்கா புடிச்சிருக்குன்னு சொல்லுங்க இல்லை எனக்கு அப்படி எதுவும் தோணலனு சொல்லுங்க அதுக்கப்புறம் நான் உங்களுக்கு ஒரு நல்ல பிரண்டா மட்டும் தான். திரும்பத் திரும்ப உங்க பின்னாடி வந்து டார்ச்சர் செய்கிறார் கேரக்டர் நான் கிடையாது அது உங்களுக்கே நல்லாத் தெரியும் என கூறுகிறார். ஆனா நீங்க ஏதோ என்னை துரோகி மாதிரி பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டு போவது எனக்கு ஒரு மாதிரி இருக்கு. வீட்டுக்கு வந்தா ஒரு ஹாய் சொல்லுங்க வெளில எங்காவது பார்த்தா ஹாய் சொல்லி கொஞ்சம் சிரிங்க அது போதும்‌. நீங்க இப்படி பண்றது எனக்கு ஒரு மாதிரி இருக்கு. என்னால எதுவுமே செய்ய முடியல. நான் பண்ணது இல்ல அப்படி என்ன தப்பு இருக்குனு எனக்கு தெரியல என கூறுகிறார்.

நீங்க காலம் முழுக்க இப்படியே தனியாவே இருந்து விடுவீர்களா? யாரையாவது ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்குங்க தானே அது நானா ஏன் இருக்கக்கூடாது. அப்படியே நீங்க வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. அத நீங்க தைரியமா என்கிட்ட சொல்லலாம் என கூறுகிறார். பிறகு அமிர்தா பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி விட அவருடைய தோழி எழிலை தைரியமா கல்யாணம் பண்ணிக்கலாம். அவரு ரொம்ப நல்லவர். ரொம்ப மொச்சூரா இருக்காரு. கணேஷ் இறந்து இரண்டு வருஷம் கூட ஆகல என சொல்ல ரெண்டு வருஷம் ஆகிடுச்சுல என அவரது தோழி சொல்கிறார்.

நீ இப்படியே இருக்க முடியாது யாராவது ஒருத்தரை கல்யாணம் பண்ணிப்பல அது எழிலா இருக்கட்டும். அவருடைய கைய புடிச்சிட்டு நீ தைரியமாக இறங்கலாம் அவர் உன்னையும் உன் குடும்பத்தையும் நல்லபடியா பாத்துப்பாரு. என் கூட கணேஷோட அப்பா அம்மா இருக்காங்க, பாப்பா இருக்கா இவங்கலாம் என்ன பண்ணுவாங்க என அமிர்தா சொல்ல இதெல்லாம் தெரிந்துதான் கிட்ட லவ் சொன்னாரு. அவரு ஒன்னும் உங்க அப்பா அம்மாவ விட்டுட்டு வாங்க சொல்லலையே. நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லல. நீ சரின்னு சொன்னா அவர் எவ்வளவு நாள் வேனும்னாலும் வெயிட் பண்ணுவார் என கூறுகிறார். பிறகு அமிர்தா இதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பி விடுகிறார்.

இந்தப் பக்கம் கோபி ராதிகா வீட்டிற்கு சென்று கதவை திறக்க முயற்சி செய்கிறார். அந்த நேரத்தில் ராதிகாவின் அம்மா தயவு செய்து இனி இந்த வீட்டுக்கு வராதீங்க என சொன்னது அவருக்கு ஞாபகம் வருகிறது. இதனால் அவர் தயங்க இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.