நிலா பாப்பா உண்மையை உளற கோபி அதிர்ச்சி கொடுக்க ஈஸ்வரி முடிவு எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் அமிர்தா செல்வி ஆகியோர் நிலா பாப்பா உடன் வீட்டுக்கு வர செல்வி அப்படியே நைசா நழுவி கொள்ள முயற்சி செய்ய அமிர்தா உள்ள வாங்க அக்கா, பயமா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க ராமமூர்த்தி வந்து நிலாவை கூப்பிடுகிறார்.
பிறகு ஈஸ்வரி பாக்கியா எங்கே என்று கேட்க அம்மாவுக்கு என்ன வேலை முடியல மினிஸ்டர் மேடம் பாக்கணும்னு சொன்னாங்க அதனால எங்கள மட்டும் அனுப்பி வெச்சிட்டாங்க என்று சொல்லி சமாளிக்கின்றனர். ராமமூர்த்தி எல்லாரும் சேர்ந்து வரவேண்டியது தானே என்று சொல்ல நானும் அதான் சொன்னேன் ஆனா கூட வேலை பார்க்கிறவங்க எங்க ஊருக்கு போனாலும் ஒரு அடம் பிடிச்சவங்க அதனாலதான் அக்கா அனுப்பி வச்சிடுச்சி என்று சொல்லி நம்ப வைக்கிறார்.
பிறகு நிலா பாப்பாவிடம் ராமமூர்த்தி கடற்கரைக்கு எல்லாம் போனீங்களா? ஜாலியா இருந்ததா என்று கேட்க ஆமா புது மாமா, புது அத்தை, புது பாட்டி எல்லாரையும் பார்த்தேன் என்று சொல்ல ஈஸ்வரிக்கு சந்தேகம் வருகிறது.
இதைத்தொடர்ந்து கோபி ராதிகா இனியா ஆகியோர் வீட்டுக்கு வர கல்யாணம் நின்று போன விஷயத்தை பாக்கியா கல்யாணம் செய்து வைத்த விஷயத்தையும் சொல்ல அதைக் கேட்டு இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதேபோல் ஈஸ்வரி செழியன் குழந்தையை தூக்கிக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு போனதையும் பாக்கியா அதை கெடுத்து குழந்தையை தூக்கி ஜெனியிடம் கொடுத்த விஷயத்தையும் சொல்கிறார். பாக்கியாவால் எனக்கு ஒரே அவமானமா போச்சு என்று சொல்கிறார்.
நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டு உச்சகட்ட கோபத்தில் இருக்கும் ஈஸ்வரி, பாக்யா வரட்டும் வச்சிக்கிறேன் என்று ஆவேசப்பட்டுக் கொண்டிருக்க அமிர்தா கீழே இறங்கி வர அவரிடம் கோபப்படுகிறார். கலெக்டரை பார்க்க குன்னக்குடிக்கு எதுக்கு போகணும் என்று கேட்க அமிர்தா அதிர்ந்து போகிறார். ராமமூர்த்தி கோபி போயிருந்த கல்யாண பொண்ணு தான் ராஜி என்ற உண்மையை உடைக்கிறார்.
அதன் பிறகு கோபி செழியன் பார்ப்பதற்காக காத்திருந்து செழியன் வந்ததும் பாட்டி உனக்காக ஒரு விஷயம் பண்றாங்க அப்படின்னா நீ அவங்களுக்கு தானே முழு சப்போர்ட்டா இருந்திருக்கணும் உங்க அம்மாகிட்ட எதுக்கு சொன்ன? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லணும்னு உனக்கு தோணவில்லை. இப்ப உங்க அம்மாவால் பாட்டிக்கு தானே அவமானம். உங்க அம்மா பண்ணது பெரிய தப்பு பெரிய துரோகம் என்று ஏற்றி விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.