எழில் அமிர்தாவுக்கு ஈஸ்வரி சாபம் விட பாக்யா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் அமிர்தா மாலையும் கழுத்துமாக வந்து நிற்க ஈஸ்வரி அவர்கள் நால்வரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்ல பாக்கியா ஈஸ்வரியிடம் கெஞ்சுகிறார்.

எனக்கு இவளை பிடிக்கல, வீட்டுக்குள்ள இவங்க வரக்கூடாது என சொல்ல பாக்கியா செல்வியை நீ போய் ஆலம் கரைச்சிட்டு வா என்ன சொல்ல ஈஸ்வரி தடுத்து நிறுத்துகிறார். தப்பு மேல தப்பு பண்றீங்க என ஈஸ்வரி எச்சரிக்கை தப்பு பண்ணது உங்க மகன்தான். அப்போ நான் தப்பு பண்ணல.

இப்பவும் அதே மாதிரி என் புள்ள தப்பு பண்ணல ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்கான். தப்பு பண்ணது நீங்க தான், பணத்துக்காகவும் வீட்டுக்காகவும் என் புள்ளைக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தீங்க என பதிலடி கொடுக்க ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு பாக்கியா அவங்கள வீட்டுக்குள்ள விட அனுமதி கொடுங்க என சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி முடியாது என உறுதியாக இருக்க ராமமூர்த்தி ஈஸ்வரியை சத்தம் போட்டு அடக்குகிறார். பிறகு பாக்கியா இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்ல ஈஸ்வரி இந்த குழந்தையும் இங்கதான் இருக்குமா என கேட்க எழில் நான் அமிர்தாவை தனியா பார்த்தது கிடையாது இந்த குழந்தையையும் சேர்த்து தான் என பதிலடி கொடுக்கிறார்.

பிறகு உள்ளே சென்றதும் பாக்யா தாத்தாவிடம் ஆசீர்வாதம் வாங்க செல்கிறார். பிறகு ஈஸ்வரியிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்ல ஈஸ்வரி இது ரொம்ப நாளைக்கு நீடிக்காது, நீ இந்த கல்யாணம் பண்ணி வச்சதுக்காக தினம் தினம் கண்ணீர் விடுவ என சாபம் விடுகிறார்.

இதனால் பாக்கியா வாழ்த்தலனாலும் பரவால்ல இப்படி சபிக்காதீங்க என சொல்ல நான் அப்படித்தான் சபிப்பேன் என சத்தம் போடுகிறார். அதோடு இனிமே என்ன அத்தனை கூப்பிடாத நான் சாகுற வரைக்கும் என் முகத்துல முழிக்காத பேசாத என சொல்ல எழில் பாட்டி என வாய் திறக்க உனக்கும் இதே தான் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

அதன் பிறகு எழில் அமர்தாவிற்கு பாலும் பழமும் கொடுக்க நிலா பாப்பா ராமமூர்த்தி அருகே சென்று தாத்தா தாத்தா என கூப்பிட அவர் குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார். பிறகு ஜெனி ரூமுக்கு போக கோபப்படும் செழியன் இனி இந்த வீட்டில் இருக்க முடியாது என துணிமணிகளை எடுத்துக் கொண்டு கிளம்ப ஜெனி நீ இந்த வீட்டை விட்டு போகக்கூடாது இது இந்த குழந்தை மேல சத்தியம் என சத்தியம் செய்ய வைக்க செழியன் எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.