ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே போக சொல்ல எழில் அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கல்யாணம் முடிந்து கோபி வீட்டுக்கு வந்ததும் மயூரா எழில் அண்ணாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என கேட்க ராதிகா முடிஞ்சிடுச்சு என சொல்ல ரெண்டு கல்யாணமா ரெண்டு பொண்ணு இருந்தாங்க என கேட்க ஒரு கல்யாணம் தான் என சொல்கின்றனர்.

அடுத்து இனியா முதல்ல வந்த பொண்ணு அண்ணாவுக்கு பிடிக்கல இரண்டாவது வந்த பொண்ண தான் அண்ணாவுக்கு பிடிச்சது என சொல்ல கல்யாணம்னாலே சண்டை தானா என சொல்லி மயூ உள்ளே செல்கிறார். அடுத்து கோபி பாக்யா செய்தது தப்பு என பேச இனியா அம்மா செய்தது சரியென சொல்ல ராதிகாவும் பாக்கியா செய்தது சரி என பேசி அதிர்ச்சி கொடுக்கிறார். உங்களால அங்க ஒரு வார்த்தை பேச முடியல உங்க வாயெல்லாம் என்கிட்ட தான் என திட்டி உள்ளே செல்கிறார்.

இந்த பக்கம் ஈஸ்வரி கோபத்தோடு உட்கார்ந்திருக்க அப்போது எழில் கல்யாணத்தை முடித்து வீட்டுக்கு வர யாரும் உள்ள வரக்கூடாது என தடுத்து நிறுத்துகிறார் ஈஸ்வரி. பாக்யாவும் எழிலும் திட்டம் போட்டு கல்யாணம் பார்வை கொண்டு சென்று தன்னை அவமானப்படுத்தி விட்டதாக சத்தம் போடுகிறார்.

அமிர்தாவை எதுக்கு கல்யாணம் பண்ணின? பொண்டாட்டி செத்துப்போன எவனா இருப்பான் அவனை கல்யாணம் பண்ண வேண்டியதுதானே என மோசமாக பேசுகிறார். பாக்யா மற்றும் ஈஸ்வரி இடையே வாக்குவாதம் நடக்க ஈஸ்வரி கடும் கோபமாக பேசுகிறார்.

நீ தானே கல்யாணம் பண்ண கூட்டிட்டு போ இழங்கள, போய் நடுரோட்டில் நில்லுங்க என சொல்ல எழில் நான் நீ வா போகலாம் என பாக்யாவை கூப்பிட ஈஸ்வரி போய்கிட்டே இருடா என திட்டுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.