எழில் அமிர்தாவுக்கு திருமணம் நடக்க காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் பாக்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பிடிக்காத வாழ்க்கை தன்னுடைய மகனுக்கு அமையக்கூடாது என போராடிய பாக்யா எழில் அமிர்தாவுக்கு திருமணம் செய்து வைக்க மணமேடையில் உட்கார வைக்க ஈஸ்வரி அங்கிருந்து கோபித்துக் கிளம்ப ராமமூர்த்தி தடுத்து நிறுத்தி நிற்க வைக்கிறார்.

அதன் பிறகு எழில் அமிர்தாவுக்கு திருமணம் நடந்து முடிகிறது. திருமணம் நடந்து முடிந்த கையோடு கோபி இனியாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப ஈஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறார். கூடவே செழியனும் கிளம்பி செல்கிறார்.

பிறகு எழில் அமர்தா பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு பாக்யாவையா தனியாக அழைத்துச் செல்லும் எழில் காலில் விழுந்து நன்றி சொல்ல பாக்கியா இருவரையும் சமாதானம் செய்கிறார். பிறகு ராமமூர்த்தி தனியாக உட்கார்ந்து இருக்க அங்கு வரும் பாக்கியா அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அவர் நான் உனக்கு செஞ்ச தப்ப நீ உன் மகனுக்கு நடக்காமல் தடுத்துட்ட அதுவரைக்கும் சந்தோஷம் என்று கூறுகிறார்.

அடுத்து அமிர்தாவின் அப்பா அம்மா இருவரையும் வாழ்த்தி விட்டு கண்ணீருடன் வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர். கூடவே குழந்தை நிலாவையும் அழைத்துச் செல்வதாக சொன்ன எழில் மற்றும் அமிர்தா அதற்கு மறுப்பு தெரிவித்து நிலாவை தங்களுடன் தான் வைத்துக் கொள்வோம் என கூறுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் வீட்டிற்கு வரும் எழில் அமிர்தா மற்றும் பாக்யாவை தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி இனி இந்த வீட்டில் உங்களுக்கு இடம் இல்லை என சொல்கிறார்.