பாக்கியாவை பழி தீர்த்துள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு இனியா கோபியுடன் வந்து இறங்க பாக்கியா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க அதையெல்லாம் காதில் வாங்காமல் உள்ளே வருகிறார் இனியா. நீ வெளியே போனா வீட்ல இருப்பேன் கேட்டு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா ஆன்ட்டி எப்படி பதறி போயிட்டாங்க என ஜெனி சொல்லிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அங்கீகளுக்கு எங்க போச்சு அறிவு அவராவது வீட்டில் இருப்பவர்கள் தேடுவாங்கன்னு ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம் என திட்ட உடனே செழியன் அப்பாவா எல்லாம் நீ திட்டாத என சத்தம் போடுகிறான்.

பாக்யாவை பழி தீர்த்த ஈஸ்வரி.. கடைசியில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அப்பா இனி அவ வெளியே கூட்டிட்டு போறான்னு என்கிட்ட சொல்லிட்டு தான் கூட்டிட்டு போனாரு என சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைய ஜெனி அத ஆண்டி கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல என கேட்க நான் பாட்டி கிட்ட சொல்லிட்டேன் என சொல்ல ஈஸ்வரி அமைதியாகவே இருக்கிறார். கோபிநாத் அப்பா ஈஸ்வரி இதை ஏன் நீ வீட்ல சொல்லல என சத்தம் போட மறந்துட்டேன் என அசால்டாக பதில் சொல்கிறார். ஈஸ்வரியும் செழியனும் இது எல்லாத்துக்கும் காரணம் பாக்கியா தான் என்பது போல பேசுவது மட்டுமல்லாமல் இனிய செய்தது தப்பே இல்லை என்பது போல நியாயப்படுத்தி பேசுகின்றனர்.

ஈஸ்வரி பாக்யாவை திட்டி விட்டு சென்று விடுகிறார். பாக்கியா அப்படியே சோகமாக அமர்ந்திருக்க அந்த நேரத்தில் எழில் வர நடந்த விஷயங்களை தெரிந்து கொண்டு இனியாவிடம் சத்தம் போட போக பாக்யா தடுத்து நிறுத்துகிறார். இந்த நேரத்தில் அவருக்கு கல்யாண மண்டபம் ஆர்டருக்காக இன்டர்வியூ வர சொல்லி மெசேஜ் வந்துள்ளது. இதனால் பாக்கியா மகிழ்ச்சி அடைகிறார்.

பாக்யாவை பழி தீர்த்த ஈஸ்வரி.. கடைசியில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மறுநாள் காலையில் பாக்கியம் இன்டர்வியூக்கு கிளம்பிச் செல்ல ஈஸ்வரி இதெல்லாம் உனக்கு தேவையா? சம்பாதித்து போட்டுகிட்டு இருந்தவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டு இப்படி அலைந்து திரிந்து கிட்டு இருக்க என திட்ட மாமனார் நீ நல்லபடியா வருவ கண்டிப்பா வாழ்க்கையில ஜெயிப்ப என ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.