அடுத்தடுத்து வந்த சோதனைகளால் கேரளாவில் படாத பாடுபடுகிறார் பாக்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடுரோட்டில் கார் ரிப்பேர் ஆகி நிற்க காரில் இருந்து எல்லோரும் இறங்கி ரோட்டில் நின்று கொண்டிருக்கும் போது பைக்கில் வந்த ஒருவர் இவர்களை முறைத்து பார்த்தபடியே சென்று திரும்பவும் யூ டர்ன் போட்டு வந்து நிற்க நான்கு பேரும் பயப்படுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அவர் என்னாச்சு என்ன பிரச்சனை என கேட்க கார் நடுவழியில் ரிப்பேர் ஆகிவிட்டதாக சொல்கின்றனர். பக்கத்தில் ஏதாவது மெக்கானிக் செட் இருக்கா என்று கேட்க இங்கு எதுவும் கிடையாது என்று சொல்லும் அவர் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் மெக்கானிக் வேலை தெரியும், நான் பார்க்கவா என்று சொல்லி அவர் காரை சரி பார்க்கிறார். எஞ்சின் சூடாகி இருக்கு மத்தபடி வேற எந்த பிரச்சினையும் இல்லை, எஞ்சின் சூடாகி இருக்கு அவ்வளவுதான் என சொல்லி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபி போன் செய்ய ஈஸ்வரி நடுவழியில் நிற்கும் விஷயத்தை சொல்ல பாக்கியாவை பிடித்து திட்டுகிறார்.

அடுத்ததாக ஒரு வழியாக கார் சரியாகி திரும்பவும் இவர்கள் கிளம்பிச் செல்கின்றனர். ஒரு வழியாக ஓட்டலுக்கு வந்து ரூம் சாவியை கேட்க அந்த ரூம் இப்ப இல்ல, நீங்க கன்ஃபார்ம் பண்ணல அதனால வேற ஒருத்தருக்கு கொடுத்தாச்சு என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதனால் ஈஸ்வரி இப்ப என்ன நடு ரோட்டில் படுத்து தூங்கனுமா என்று கோபப்பட்டு போனை குடு நான் கோபிக்கு போன் பண்றேன் என்று சொல்ல இன்னொரு பக்கம் இனியா எழிலுக்கு போன் பண்றேன்னு சொல்ல பாக்யா யாருக்கும் போன் பண்ண வேண்டாம். வேற ஏதாச்சு ஹோட்டலா பாத்து தேடலாம் என்று சொல்லி எல்லோரையும் அழைத்துச் செல்ல எல்லா ஹோட்டலும் புல்லாக இருப்பதாக ஆன்லைனில் பார்த்துவிட்டு இனியா சொல்ல அப்படின்னா சென்னைக்கு திரும்பி போயிடலாம் என்று ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.