வீட்டுக்கு போய் சாபம் விட்ட நிலையில் ராதிகா முக்கிய முடிவு ஒன்றை எடுக்க உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோர்ட்டுக்கு போன பாக்கியா இன்னும் விவாகரத்தில் உறுதியாக இருக்கிறாரா அல்லது உணர்ச்சிவசத்தில் எடுத்த முடிவு என எழில் சோதிக்க பாக்யா விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருக்கிறார்.

வீட்டுக்கு போய் ஈஸ்வரி விட்ட சாபம்.. ராதிகா எடுக்கப் போகும் முடிவு.. அதிரடியான திருப்பத்துடன் பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் ராதிகா வீட்டுக்கு போன ஈஸ்வரி ராதிகாவை பார்த்து பாக்கியா ராதிகாவின் மீது மதிப்பும் மரியாதையும் பாசமும் வைத்திருந்ததை பற்றி பேசி அவளுக்கு எப்படி நான் துரோகம் செய்ய முடிந்தது என கேட்கிறார். என் குடும்பமே சின்னா பின்னமா போய் நிக்குது இதுக்கு நீ தான் காரணம். உன்னை எல்லோரும் எங்க வீட்டுல குடும்பத்துல ஒருத்தியா தான் பார்த்தோம் ஆனா நீ எங்க எல்லோருக்கும் இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா? நீ நல்லாவே இருக்க மாட்ட. வயிரெறிந்து சொல்றேன் நாங்க வீட்டுல கண்ணீரும் வேதனையும் உன்ன சும்மா விடாது என திட்டுகிறார்.

ராதிகாவை திட்டியதால் அவருடைய அம்மா குறிப்பிட அவரையும் நீ எல்லாம் ஒரு அம்மாவா என கடுஞ்சொல்லால் திட்டியிருக்கிறார். பிறகு ராதிகா எவ்வளவு பேச முயற்சி செய்தும் பேச விடாத ஈஸ்வரி சாபத்திற்கு மேல் சாபம் விட்டு மயூவையும் திட்டுகிறார்.

வீட்டுக்கு போய் ஈஸ்வரி விட்ட சாபம்.. ராதிகா எடுக்கப் போகும் முடிவு.. அதிரடியான திருப்பத்துடன் பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த ஈஸ்வரி நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவே உன் பொண்ணும் நீயும் சந்தோஷமா வாழவே முடியாது. ரெண்டு பேரும் வாழ்க்கை முழுக்க கண்ணீரோடு தான் இருப்பீங்க என மண்ணை வாரி தூவி சாபம் விடுகிறார். இதனால் ராதிகா அதிர்ச்சி அடைந்து அப்படியே நிற்கிறார். பிறகு ராதிகாவை உள்ளே அழைத்துச் சென்ற அவருடைய அம்மா அந்த குடும்பத்துக்கு நல்லது பார்த்தா உனக்கு என்ன தியாகி பட்டமா கொடுத்தாங்க? பேசாம அந்த கோபியை கல்யாணம் பண்ணிக்க என கூறுகிறார். ராதிகாவும் ஈஸ்வரி பேசிய பேச்சாள் அதிரடி முடிவை எடுக்கப் போகிறார் என்பது போலவே இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் பாக்கியா மற்றும் கோபி என இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிடுகிறது.