பாக்கியா எடுத்த முடிவு, ஈஸ்வரி கேட்ட கேள்வியால் கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் செழியன் என இருவரும் வேகவேகமாக ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகின்றனர். இனியாவுக்கு என்ன ஆச்சு என கேட்க கோபியும் ராதிகாவும் பதில் சொல்ல முடியாமல் நிற்க அங்கு வரும் எழில் நடந்த விஷயத்தை சொல்ல நான் உடனே இனியாவை பார்க்க வேண்டும் என உள்ளே சென்று இனியாவை பார்த்து கண் கலங்குகிறார்.

பிறகு செழியன் உனக்கு அம்மா பாட்டி தாத்தா நான் எழில் என எல்லோரும் இருக்கோம், இப்படியெல்லாம் பண்ணலாமா என கேட்க இனியா சாரி கேட்கிறார். பிறகு வெளிய வந்த ஈஸ்வரி கோபியை சரமாரியாக கேள்வி கேட்கிறார். ராதிகா அவ தப்பு பண்ணா அதனால கண்டித்தோம் என சொல்ல அவளை கண்டிக்க நீ யாரு? கோபியை கல்யாணம் பண்ணிட்டா இனியாவுக்கு அம்மா ஆகிடுவியா என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

அடுத்ததாக நர்ஸ் பில் கட்ட சொல்ல கோபி நான் கட்டுகிறேன் என சொல்லி வாங்க பாக்யா பைலை வாங்கி நான் கட்டுகிறேன் என சொல்லி பணத்தை கட்டுகிறார். அடுத்து இன்னும் கொஞ்ச நேரத்தில் இனியாவை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள் என சொல்ல கோபி நீங்க எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க நான் இனியாவை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என சொல்ல பாக்கியா இனி இனியா என்கூட தான் இருப்பா உங்களோட அனுப்ப முடியாது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

எல்லோரும் இனியாவை கோபியுடன் அனுப்ப முடியாது என்று சொல்ல கோபி அதெல்லாம் முடியாது இவ்வளவு நாள் என் பொண்ணு என் கூட தான் இருந்தா இனிமேலும் என்கூட தான் இருப்பா என சொல்கிறார். பாக்கியா நான் உங்கள கண்டித்தது தப்புன்னு சொல்லல, ஆனா இனி பாக்யா எப்பவும் என் கூட தான் இருக்கணும் என சொல்ல ராதிகா எதுக்கு தேவையில்லாத பிரச்சனை இனியா கிட்டயே கேளுங்க என சொல்ல கோபி இது நல்லா ஐடியா அவகிட்டயே கேட்கலாம் என்று சொல்லி உள்ளே செல்கின்றனர்.

செழியன், எழில், ஈஸ்வரி எங்களுடன் வந்து விடு என சொல்ல கோபி நீங்க யாரும் போர்ஸ் பண்ணாதீங்க, இனியாவே நல்ல முடிவா சொல்லுவா என சொல்லி நீ டாடியோட வந்துடு இனிமே உன்ன நான் எதுவும் சொல்ல மாட்டேன், திட்டவே மாட்டேன் என சொல்லி கையைப் பிடித்து கூப்பிட இனியா அப்படியே இருக்க கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.