குடிபோதையில் வீட்டுக்கு வந்த கோபியால் ராதிகா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போதை தெளிந்த கோபி மறுநாள் காலையில் கட்டிலில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்க அப்போது ராதிகா வர ராதிகாவிடம் மன்னிப்பு கேட்க அவர் கோபப்பட்டு கண்டு கொள்ளாமல் வெளியே செல்கிறார்.

பிறகு இனியா வர இனியாவிடம் கோபி மன்னிப்பு கேட்க அவளும் கோபமாக பேசிவிட்டு வெளியே செல்கிறார். பிறகு வெளியே வரும் கோபி மயூ பக்கத்தில் உட்கார அவள் பயந்து ஓரம் செல்ல பயப்படாத டாடி தான் என சொல்கிறார். நீங்க நேத்து நைட்டு ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு வந்தீங்க உங்கள பாக்கவே பயமா இருந்துச்சு என சொல்ல இனிமே குடிக்க மாட்டேன் என கோபி சொல்கிறார். அதன் பிறகு ராமமூர்த்தி கோபியை திட்டுகிறார்.

பிறகு ராதிகா இருவரையும் ஸ்கூலில் டிராப் செய்ய கிளம்ப கோபி டு மினிட்ஸ், நானே கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன் என சொல்ல ராதிகா ஒன்னும் தேவையில்லை என கோபமாக கார் சாவியை புடுங்கி கொண்டு கிளம்புகிறார். பிறகு ராமமூர்த்தி இங்கே வீட்டுக்கு வந்து ஈஸ்வரி மற்றும் செழியனிடம் கோபி குடித்து வந்த விஷயத்தை சொல்ல இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஈஸ்வரி கோபியை நினைத்து வருத்தப்பட செழியன் ஆபீஸ் பார்ட்டி ஏதாவது இருந்திருக்கும் அதனால் தான் குடிச்சிருப்பாரு என சமாளிக்கிறான். அதன் பிறகு பாக்யா ஸ்போக்கன் இங்கிலீஷ் பிளாஸ்டிக் கிளம்பிக்கொண்டிருக்க எழில் புதிய ஹேண்ட்பேக் வாங்கி வந்து கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறான்.

பிறகு பாக்யா கிளாசுக்கு வர எல்லோரும் அவரை டீச்சர் என்று நினைக்க பிறகு நானும் இங்கிலீஷ் கத்துக்க தான் வந்திருக்கிறேன் என சொல்லி உட்காருகிறார். மறுபக்கம் ராதிகா ஆபீஸ்ல கோபி சாரி கேட்க இனிமே இப்படி குடிச்சிட்டு வந்தீங்கன்னா இனி நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன் என சொல்லி ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் கோபி இனி கண்டிப்பாக குடிக்க மாட்டேன் என ராதிகா மீது சத்தியம் செய்கிறார்.

பிறகு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் டீச்சர் பாக்கியாவை அவரைப்பற்றி இங்கிலீஷில் அறிமுகம் செய்து கொள்ள சொல்ல பாக்யா இங்கிலீஷ் தெரியாமல் தடுமாற எல்லோரும் சிரிக்கின்றனர். பிறகு பழனிச்சாமி நாம வரும்போதும் இப்படித்தான் இருந்தோம் என்னமோ இங்கிலீஷ்ல புலி மாதிரி சிரிக்கிறீங்க என எல்லாரையும் திட்டி பாக்யாவை ஊக்கப்படுத்த பிறகு டீச்சர் இப்படித்தான் பேசணும் என சொல்லிக் கொடுக்க பாக்யா அதே போல் பேசி அசத்த அனைவரும் கைத்தட்டுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.