நடு இரவில் ராதிகா வீட்டிற்கு சென்றுள்ளார் கோபி.

Baakiyalakshmi Episode Update 03.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி நடுஇரவில் ராதிகா வீட்டிற்கு கிளம்பி பாக்கியாவிடம் நான் வெளியே போயிட்டு வருகிறேன் எனக் கூறுகிறார். எங்க போறீங்க எப்ப வருவீங்க என பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்க சும்மா கேட்டுட்டு இருக்காத, லேட் ஆனா நானே கதவைத் திறந்து வந்துவிடுகிறேன் என்று ஒரு சாவி இருக்கு இல்ல நான் காலையில தான் வருவேன் என சொல்லிவிட்டு செல்கிறார்.

ராதிகா லைட் எல்லாம் ஆஃப் பண்ணிவிட்டு தூங்கப் போகும் நேரத்தில் காலிங் பெல் அடிக்கிறது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் ஒரு வேளை ராஜேஷ் ஆக இருக்குமோ என கதவை திறக்க பயப்பட கோபி போன் செய்து நான் தான் கதவைத் திற என கூறுகிறார். லேட் நைட்டில் வந்ததுக்கு சாரி என கூறுகிறார். பிறகு உள்ளே போன அவர் உன்னை பாக்கணும் போல இருந்துச்சு அதனால தான் கெளம்பி வந்துட்டேன் என கூறுகிறார். எனக்கும் உங்கள பார்க்கணும் போல ஆசையாக இருந்தது என கோபி சொல்கிறார்.

அதன் பின்னர் ராதிகாவை தோள் மீது சாய்த்துக் கொண்டு இருக்கிறார். இனிமே எனக்கு நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் வேறு யாரும் கிடையாது என கூறுகிறார். ராதிகா நாளைக்கு உங்க ஒய்ப் கோர்ட்டுக்கு வந்து விடுவார்களா என கேட்க வந்துவிடுவார் என சொல்கிறார். மேலும் ஒரே ஒரு ரெக்வெஸ்ட் என கோபி சொல்ல என்ன என்று ராதிகா கேட்கிறார். இனிமே அவளை என்னோட ஒய்ஃப் சொல்லாத என் லைஃப்ல இனி அவ இல்லை என சொல்கிறார்.

அதன்பிறகு கோபி வீட்டுக்கு கிளம்புகிறேன் என சொல்ல இந்த நேரத்தில் ஏன் போறீங்க இங்கேயே தூங்குங்க என ராதிகா கூற கோபியும் ராதிகாவுடன் படுத்துத் தூங்குகிறார்.

மறுநாள் காலையில் பாக்கியா கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் தயாராகி வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் இனியா மற்றும் எழில் வர அப்போது கோர்ட்டுக்கு போக வேண்டும் என சொல்கிறார். எழில் ஏன் அப்பாவை டிவோர்ஸ் பண்ண போறியா என்ன சொல்ல, இனியா அப்படி ஒன்னு நடந்தா அப்பா ஹாப்பியா இருப்பார் நான் அப்பா கூட போய் விடுவேன் என சொல்கிறார். காலையிலேயே ஏன் இப்படி பேசுறீங்க என பாக்கியா கோபப்படுகிறார். அவருடைய ஆபீஸ்ல என்ன சேர்க்க நிறைய கையெழுத்து வாங்கி இருந்தார். அதுக்காகத்தான் கோட்டுக்கு கூப்பிட்டு இருக்காது என சொல்ல எழில் எதுவுமே கேட்காமல் கையெழுத்துப் போட்டு விடுவியா அம்மா என கேட்கிறார். உங்கப்பா தானடா கேட்டாரு என பாக்கியா கூறுகிறார்.

பிறகு பாக்கியா என்ன இன்னும் அவரை ஆள காணோம் என கோபிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். 8 மணிக்கு மேல கோபி வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்த கோபியிடம் என்னங்க இவ்வளவு லேட்டா வர்றீங்க கோர்ட்டுக்கு போகணும்னு சொன்னீங்களே, நான் ஹீட்டர் போட்டு உங்களுக்கு டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் குளிச்சிட்டு வாங்க டிபன் சாப்பிட்டு கிளம்பிடாலாம் சீக்கிரம் போகனும்ல என கூறுகிறார். பிறகு கீழே வந்த கோபிக்கு டிபன் கொடுத்து சாப்பிட வைக்கிறார்.

அதன் பின்னர் மாமாவிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு வருகிறேன் என உள்ளே போய் பாக்கியா கோர்ட்டுக்கு போய்ட்டு வரேன் என சொல்ல ஈஸ்வரி சரி என கூறுகிறார். அவளுடைய மாமனார் எதற்கு எனகேட்க பாக்கியா அவர்தான் கூப்பிட்டு போறாரு என சொல்ல வேண்டாம் என சைகையில் கூறி பதறுகிறார். ஈஸ்வரி எதுக்கு வேண்டாம்னு சொல்றீங்க அவ போயிட்டு வரட்டும் கெளம்பிட்ட பிறகு வேணாம்னு சொல்லாதீங்க என நீ போய்ட்டு வா பாக்கியா என அனுப்பி வைக்கிறார். கோர்ட் என்று பயப்படுகிறீர்களா மாமா அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் பார்த்துகிறேன் என சொல்கிறார் பாக்கியா.

இந்த பக்கம் எழில் படத்துக்காக அமிர்தா சூப்பராக பாட்டு பாடி விடுகிறார். பாட்டு பாடி முடித்ததும் வெளியே வந்த இருவரும் ஒன்றாக நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் நீங்க தான் அடுத்த ஸ்ரேயா கோஷல் எனக் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

கோர்ட்டுக்குப் போன பாக்கியா ஒரே கூட்டமாக இருப்பதை பார்த்து எதுக்கு இவ்வளவு கூட்டம் என கேட்கிறார். பாதிப் பேர் விவாகரத்து கேட்டு வந்து இருக்காங்க மீதிப்பேர் விவாகரத்துக்கு அப்புறம் ஆன பஞ்சாயத்துக்கு வந்திருக்காங்க என சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். ‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.