முத்துவேல் தற்கொலைக்கு முயல ஜோசப்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜெனி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்துவேல் தற்கொலைக்கு முயல கோபி கதவை உடைத்து அவரை காப்பாற்ற எல்லோரும் ஏன் இப்படி பண்றீங்க என்று கலங்கி நிற்க இனிமேல் நான் ஊருக்குள்ள எப்படி தலை நிமிர்ந்து நடப்பேன் என்று முத்துவேல் கலங்க கோபி ஆறுதல் கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து எங்கே செழியனுக்கு அறிவுரை கூறி பாக்கியா வழியனுப்ப ஈஸ்வரி பாக்கியாவிடம் பயங்கர கோபத்தை காட்டுகிறார். வீட்டுக்கு வா அப்புறம் இருக்கு இந்த பிரச்சனையை அவ்வளவு லேசா விடமாட்டேன் என சொல்கிறார். மேலும் செழியனுக்கு அந்த ஜெனி வேண்டவே வேண்டாம் என கூறுகிறார்.
ஒரு பக்கம் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஜோசப் சொந்தக்காரங்க எல்லாம் ஞானஸ்தானம் நடக்குமா நடக்காதா என்று கேட்கிறார்கள் நான் பாதர் கிட்ட பேசுறேன் நாளைக்கு முடியும்னா நாளைக்குப் வச்சிடலாம் என்று சொல்ல ஜெனி ஒரு நிமிஷம் காரை நிறுத்துங்க என்று சொல்லி காரை ஓரம் கட்டி இந்த ஞானஸ்தானம் இப்போதைக்கு நடக்க வேண்டாம். யாரையும் கஷ்டப்படுத்திட்டு என் குழந்தைக்கு ஒரு நல்லது நடக்க கூடாது என்று சொல்லிவிட ஜோசப் எல்லாம் உன்னுடைய நல்லதுக்காக தான் செய்கிறேன் என்று சொல்ல ஜெனி நீங்க இந்த விஷயத்தில் என் பேச்சை கேட்கிறதா இருந்தா வீட்டுக்கு வரேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். மரியம் ஜெனி சொல்றதுதான் சரி என்று சொல்ல ஜோசப்பும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
அடுத்து பாண்டியன் ராதிகாவிடம் என்னாச்சு என்ன பிரச்சனை என்று கேட்க அவர் முத்துவேல் தற்கொலைக்கு முயன்ற விஷயத்தை சொல்ல பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார். பழனி வழியே வந்ததும் அவரை தனியா விடாதீங்க கூடவே ஆள் இருங்க என்று சொல்கிறார்.
மறுபக்கம் அமிர்தா பாக்யாவுக்கு போன் போட்டு கொஞ்சம் சீக்கிரம் வாங்க திடீர்னு மெனுல சில மாற்றங்கள் செஞ்சிருக்காங்க என்ன பண்றதுன்னு எங்களுக்கு புரியல என்று சொன்னதும் பாக்கியா, எழில் ஹோட்டலில் இருந்து கிளம்பி செல்கின்றனர். நைட்டுக்கு நான்வெஜ் செய்வது தான் முடிவு பண்ணி இருந்தோம் ஆனால் சில கோவிலுக்கு போறதுனால வெஜிட்டேரியன் வேணும்னு கேட்டதா சொல்றாங்க 75 பேருக்கு வெஜிடேரியன் சமைக்கணும் என்று சொல்ல பாக்கியா அமைச்சரோட பி.ஏ-க்கு போன் போட அவர் இட்லி தோசை அந்த மாதிரி செய்யுங்க என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் பாக்கியா என்ன செய்வது என்று தெரியாமல் கோமதியை உதவிக்கு கூப்பிட போன் செய்ய அவர் எங்க அண்ணன் வீட்ல பிரச்சனை அதனால மனசு சரியில்ல என்னால சமைக்க முடியாது தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்லிவிட பாக்கியா ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் பார்த்துக்கிறேன் அப்புறம் வந்து உங்கள பாக்குறேன் என போனை வைக்கிறார்.
ஒரு வழியாக சமைத்து முடித்து எல்லாவற்றையும் மாநாடு நடக்கும் இடத்திற்கு ஏற்றி அனுப்பி விடுகின்றனர். மறுநாள் காலையில் சமைத்து முடித்துவிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்து ஊருக்கு கிளம்பலாம் என சொல்கின்றனர். கோமதி அக்காவும் வராங்களா என்று கேட்கலாம் என்று அமிர்தா சொல்ல பாக்யா நான் போய் அவங்கள நேர்ல பார்த்து பேசிட்டு வந்துடுறேன் என்று ஹோட்டலுக்கு கிளம்பி வருகிறார்.
இராஜி அழுது கொண்டிருக்க வெளியே சென்று இருந்த கண்ணன் ரூமுக்கு வர அழுவாத என்று சொல்ல ராஜி நகர் கல்யாண நின்னு போயிருக்கும் ஊர் ஜனங்கள் எல்லாம் அவமானப்படுத்தி பேசி இருப்பாங்க ஒரே ஒரு முறை போன் பேசிக்கிறேன் ஃபோனை கொடு என்று கேட்க கண்ணன் கொடுக்க மறுக்கிறார். ராஜி அழுது கொண்டே இருக்க திட்டி விட்டு விட்டு திரும்பவும் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்ப ஏன் என்னை தனியா விட்டுட்டு போற என்று கேட்க நீ அழுவதற்கு அப்பதான் வசதியா இருக்கும் உன் மூஞ்சிய பாத்துட்டு இருக்க முடியாது என்று கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.