பாக்கியாவின் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமி செல்வி என நான்கு பேரும் ரெஸ்டாரண்டில் இருக்கும்போது ஹோட்டலுக்கு வரும் கார்கள் எல்லாம் பார்க்கிங் இடமில்லாமல் வேறொரு ஹோட்டலுக்கு சென்று விடுகின்றனர்.
இதையடுத்து பழனிச்சாமி நான் ரெஸ்டாரண்ட் வந்த முதல் நாடு இத நோட் பண்ணினேன். ஆனா நெகட்டிவா சொல்ல வேண்டாம் என்பதால்தான் சொல்லல என்று சொல்கிறார். முதலில் இந்த பார்க்கின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்கிறார்.
பாக்யாவுக்காக பழனிச்சாமி ஓடிவந்து உதவுவதை வைத்து செய்து பாக்கிய அக்காவுக்கு மட்டும்தான் உதவுவீங்களா என்று கலாய்க்கிறார். பிறகு எழிலை தனியாக கூப்பிட்டு இவங்கள பார்க்கும் போது எனக்கு என்று கேட்க அவர் நல்ல பிரண்ட்ஸ் என்று சொல்ல செல்வி இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று அடி போடுகிறார். எழில் இத பத்தி நானும் அம்மாகிட்ட பேசி அடிவாங்கி இருக்கேன் என்று சொல்கிறார். இருந்தாலும் செல்வி அக்காவா அப்படியே விட முடியாது இல்லையா என்று கூறுகிறார்.
அடுத்ததாக பழனிச்சாமி காரில் சென்று கொண்டிருக்க ஒரு காலி இடத்தை பார்த்து இந்த இடத்தை பேசி பார்க்கிங்கிற்காக ரெடி பண்ணலாம் என்று யோசித்து அதை இடத்திற்கான ஓனரின் காண்டாக்ட் நம்பரையும் பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டு வாங்கி பேசுகிறார். உடனே பாக்கியாவிடம் வந்து விஷயத்தில் சொல்ல அவர் வாடகை அதிகமாக இருந்தால் என்னால கொடுக்க முடியாது என்று சொல்ல பழனிச்சாமி ஆரம்பத்தில் இந்த மாதிரி செலவுகள் வரும் இதெல்லாம் முதலீடு என்று சொல்கிறார். பிறகு பாக்கியாவிடம் சரி அவரிடம் பேசிப் பார்க்கலாம் என்று கூறுகிறார்.
அதன் பிறகு வீட்டில் ஈஸ்வரி ஜெனியின் குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டிருக்க ராமமூர்த்தி வெளியில் செல்ல கிளம்பி வந்து ஈஸ்வரி பக்கத்தில் உட்கார்ந்து அவரை கலாய்த்து கொண்டிருக்க நிலா பாப்பாவும் ஒடி வந்து தாத்தாவிடம் சாக்லேட் கேட்க தாத்தா வெளியே தான் போறேன் வரும்போது வாங்கிட்டு வரேன் என்று சொல்லி ராமமூர்த்தி கிளம்பிச் செல்ல நிலா குழந்தையை தொட்டு தொட்டு விளையாட ஈஸ்வரி நிலாவை சோபாவில் இருந்து கீழே இறக்கி விடுகிறார்.
ராதிகா நிலாவை கூட்டிச்சென்று வெளியில் விளையாட எழில் வந்ததும் நிலா அப்பா என ஓடி விடுகிறாள். பிறகு நிலா பாப்பா எழிலுடன் பாட்டி என்ன திட்டுனாங்க என்று கம்ப்ளைன்ட் செய்ய ஈஸ்வரி அவர் குழந்தையை தொட்டு தொட்டு விளையாடி இருந்த அவளும் சும்மா குழந்தை பெரிய புள்ளையா அதனாலதான் சொன்னேன் என்று சொல்ல எழிலின் முகம் மாறுகிறது. பிறகு நிலாவை கூட்டிக்கொண்டு மேலே சென்று விடுகிறார்.
மறுபக்கம் கோபி மற்றும் ராதிகா ரெஸ்டாரண்டில் இருக்கும்போது பிசினஸ் ரொம்ப நல்லா போகுது என்று பேசிக் கொண்டிருக்க செஃப் காலிஃப்ளவர் வச்சு புதுசா ஒரு டிஷ் பண்ணி இருக்கேன் என்று கொண்டு வந்து கொடுக்க கோபி அதை சாப்பிட்டு பார்த்து ஆஹா ஓஹோ என அவரை பாராட்ட ராதிகா போதும் என கண்காட்டுகிறார். ஆனாலும் கோபி புகழ்ந்து தள்ள ராதிகா அவரை அனுப்பி வைத்துவிட்டு கோபியை கூட்டிச் சென்று உங்களுடைய பிசினஸ் ஏன் லாஸ் ஆச்சுன்னு இப்பதான் தோணுது, அவர் நல்லா தான் சமைக்கிறார் இருந்தாலும் இந்த அளவுக்கு பாராட்டுன நாளைக்கு அவருடைய பேச்சை நாம கேக்குற மாதிரி ஆகிடும். எல்லார்கிட்டயும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருங்க என்று அட்வைஸ் செய்கிறார். கோபி இப்படி ஒன்னு இருக்கா என்று யோசிக்கிறார்.
மேலும் ஸ்ரிட்டா தான் இருக்கணும் இருந்துடலாம் என்று முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.