கோபிக்கு ராதிகா செக் வைத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று விட்டு வருவதாக சென்னை ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்தும் இடத்திற்கு வருகிறார்.

கிளாசிக் சேர வேண்டும் என சொல்லி பணத்தைக் கட்டி கிளாஸில் சேருகிறார். நாளையிலிருந்து கிளாஸ்க்கு வர சொல்கின்றனர். மறுபக்கம் கோபி இனியா மட்டும் சைக்கிள் வாங்கி கொடுக்க ராதிகாவுடன் கடைக்கு வந்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் இனியா மற்றும் மயூ என இருவரும் கோபியை கூப்பிட எங்கு போவது என தெரியாமல் தவிக்கிறார். அதன் பிறகு இனியா குறைந்த விலையில் சைக்கிள் எடுக்க இதைவிட நல்லதா பிராண்ட்ல பாரு பிராண்டாக எடுத்தால்தான் ரொம்ப நாளைக்கு நல்லா ஓடும் என சொல்ல இதைக் கேட்ட ராதிகா ஏற்கனவே சூஸ் செய்து வைத்திருந்த சைக்கிளை வைத்துவிட்டு ஃபாரின் பிராண்ட் சைக்கிளை எடுக்கிறார்.

பிறகு கோபி அந்த சைக்கிளை வந்து பார்க்க விலை 27 ஆயிரம் ரூபாய் என இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். வேலை இவ்வளவு அதிகமா இருக்கு என கேட்க ராதிகா இனியாவுக்கு மட்டும் நல்ல பிராண்டா எடுக்க சொல்றீங்க என்ன சொல்ல கோபி எதுவும் பேச முடியாமல் நல்லா தான் இருக்கு எடுத்துக்கோங்க என சொல்லி புலம்பிக்கொண்டே இருவருக்கும் பில் பே பண்ணுகிறார்.

இந்த பக்கம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் சேர்ந்த பாக்கியா கேள்விக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி சந்தோஷமாக பேசிக்கொண்டு வண்டியில் வர அப்போது எதுவே புல்லட் பைக்கில் வந்து என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் பசுபதி. பாக்யா வண்டியை எடுத்து வந்து அவர் வண்டியின் மீது மோதி கீழே விழ அவர் பாக்கியாவுக்கு உதவ முன்வர பாக்கியா நானே எழுதுகிறேன் என சொல்லி எழுந்து அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வரும் பாக்கியா எல்லாரிடமும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் சேர்ந்திருக்கும் விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.