நிச்சயதார்த்த மேடையில் எழில் இருக்க அமிர்தா சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எழிலுடன் குடும்பத்தினர் அனைவரும் நிச்சயதார்த்தம் நடக்கும் மண்டபத்திற்கு வர வர்ஷினியின் அவருடைய அப்பாவும் இவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.

வர்ஷினியின் அப்பா எல்லாருக்கும் மேலே ரூமுக்கு ரெஸ்ட் எடுங்க 7 மணிக்கு நிச்சயதார்த்தம் மறுநாள் காலை 9 மணியிலிருந்து 9.30 மணி வரை முகூர்த்தம் என கூறுகிறார். மேலும் நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளைக்கு தேவையான டிரஸ் எல்லாத்தையும் வர்ஷினி பார்த்து பார்த்து எடுத்து வச்சிருக்கான் அது அவருக்கு சரியா இருக்கான்னு போட்டு பார்த்தா போதும் என சொல்ல வர்ஷினி எழிலைக் கூப்பிட ஈஸ்வரி செழியனையும் கூட அனுப்பி வைக்கிறார்.

விருப்பமில்லாமல் நிச்சயதார்த்தத்திற்கு தயாராக மறுபக்கம் அமிர்தா எனில் பேசிய வார்த்தைகளை நினைத்து எதை எதை யோசித்து எழில் மற்றும் சதீஷிற்கு ஃபோன் செய்து பார்க்க இருவரும் போனை எடுக்காத காரணத்தினால் சென்னைக்கு கிளம்ப முடிவு எடுத்து அப்பா அம்மாவிடம் பேச அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். பிறகு ஒரு வழியாக அவர்களை சம்மதிக்க வைத்து குழந்தையை தூக்கிக் கொண்டு சென்னைக்கு கிளம்பி வருகிறார்.

மண்டபத்தில் பாக்கியா எழிலுக்கு இதெல்லாம் பிடித்து தான் நடக்குதா என இன்னமும் குழப்பத்தில் இருக்க பிறகு எழிலை பார்க்க ரூமுக்கு போக அப்போது கண்ணாடியில் ஜாடையில் பாக்யா கேட்க அதை கவனிக்கும் ஈஸ்வரி பாக்யாவை பேச விடாமல் வெளியே அழைத்துச் சென்று விடுகிறார்.

அடுத்து கோபி ராதிகா மயூரா மற்றும் இனியா உடன் மண்டபத்துக்கு வந்து இறங்க செழியன் அவர்களை வரவேற்க கோபியை பார்த்து ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் அமிர்தா எழில் வீட்டிற்கு வர வீட்டின் கதவுகள் பூட்டி இருக்க பக்கத்தில் விசாரிக்க நிச்சயதார்த்தம் என தெரிய வருகிறது.