இனியாவுக்கு ப்ரொபோஸ் செய்துள்ளான் சரண்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா எழிலிடம் ஆபீஸில் நடந்த விஷயங்களை பற்றி பேசி நானும் இங்கிலீஷ் கத்துக்கட்டுமா எனக் கேட்க இதில் தாராளமா கத்துக்கமா இதுல என்ன இருக்கு? நானே உனக்கு தினமும் காலையில ஆறு மணி நேரம் சாயங்காலம் அரை மணி நேரம் சொல்லி தரேன் என சொல்ல வேண்டாம் நீ எல்லாம் சொல்லித் தர வேண்டாம், நான் கிளாஸ் போறேன் என சொல்கிறார்.

பிறகு ஈஸ்வரி படுத்து தூங்கிக் கொண்டிருக்க ராமமூர்த்தி நிலா பாப்பாவுடன் ரூமுக்கு வர இவளை எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க இவளை பார்த்தாலே எழில் கல்யாணத்துல நடந்த விஷயங்கள் தான் ஞாபகம் வருது என சத்தம் போட நிலா பாப்பா இறங்கி அம்மா அம்மா என சொல்லிக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்து விடுகிறது.

பிறகு செழியன் போன் பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் நிலா பாப்பா பெரியப்பா பெரியப்பா விளையாடலாமா என கேட்டு செழியனுடன் செல்ல செழியன் குழந்தையுடன் விளையாட பிறகு உன்னுடைய பெயர் என்ன கேட்க நிலா என சொல்கிறது. பெரியப்பா பேர் என்ன தெரியுமா செழியன் என சொல்ல நிலா பாப்பா செழியன் என திருப்பி சொல்கிறது.

இதுவரை விளையாட்டு இருக்கும்போது எழில் வர உடனே செழியன் நிலாவை கீழே இறக்கி உட்கார வைத்துவிட்டு சைலண்டாக இது என சைகை காட்டி எழில் வந்ததும் எழுந்து ரூமுக்கு ஓடி விடுகிறார்.

மறுபக்கம் இனியா மற்றும் சரண் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வரும்போது சரண் எங்க வீட்டுக்கு வா என கூப்பிட இனியா இப்பல்லாம் வரமாட்டேன் என சொல்ல ஓ முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வரேன்னு சொல்றியா என சரண் கேட்க இனியா ஷாக் ஆகிறார். பிறகு இனியா என்ன சொன்ன என கேட்க இல்ல சும்மா சொன்னேன் எல்லாம் முறைப்படி ஒவ்வொன்னா நடக்கணும்ல முதல்ல ப்ரபோஸ் பண்ணனும், அதுக்கு அப்புறம் லவ் பண்ணனும், அதுக்கு அப்புறம் காலேஜ் போகணும், வேலைக்கு போகணும் என சொல்ல இனியா நீ பேசாம வா இல்லனா சைக்கிள்ல நீ கெளம்பு நான் நடந்து வரேன் என சொல்ல சரண் பேசாமல் வரேன் என சொல்லி இருவரும் நடந்து வருகின்றனர்.

அடுத்து செழியன் மேலே உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் இல்லாததால் என்னிடம் தண்ணீர் கேட்க அமிர்தா தண்ணீர் எடுத்து கொண்டு செல்கிறாள்.

பிறகு ராதிகா கோபியிடம் பாக்யாவுக்கு கேன்டீன் ஆர்டர் கிடைத்த விஷயத்தை பற்றி சொல்ல கோபி பாக்யாவுக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா என பாராட்ட ராதிகா கடுப்பாகி கோபியை திட்டி விட்டு செல்கிறார். இதனால் கோபி உனக்கு இதெல்லாம் தேவைதான் என புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.