அமிர்தாவிடம் உண்மையை மறைத்துள்ளார் எழில்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் அமிர்தாவை பார்க்க போன இடத்தில் அவரிடம் என்ன மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்கிறார். அமிர்தா பாட்டி என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொன்னாங்களா என கேட்க எழில் பதில் சொல்ல முடியாமல் நிற்க அமிர்தா பரவால்ல நான் வெயிட் பண்றேன் எவ்வளவு நாள் ஆனாலும் நான் காத்துகிட்டு இருக்கேன் என கூறுகிறார்.

நான் என்னென்னமோ பேசணும்னு வந்தேன் ஆனா என்னால எதுவும் பேச முடியல மன்னிச்சிடுங்க நீங்க வீட்டுக்கு போங்க என்னை பத்தி எந்த செய்தி வந்தாலும் என்னை மன்னிச்சிடுங்க சொல்லி அங்கிருந்து விடைபெற அமிர்தாவிற்கு எதுவும் புரியாமல் நிற்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த எழிலிடம் பாக்கியா உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா என கேட்க பாட்டி சொன்னா எல்லாம் நல்லதா தான் இருக்கும் என சொல்லிவிட்டு மேலே சென்று விடுகிறார். பிறகு அங்கு வரும் ஜெனி ரொம்ப கஷ்டமா இருக்கு என இந்த குடும்பத்துக்காக நீங்க உங்க வாழ்க்கையை எதற்கு இப்படி தொலைக்கணும் இந்த வீட்டுக்காக ஏன் நீங்க இப்படி கஷ்டப்படணும் என கேட்க என்னோட கல்யாணத்தால இந்த வீடு சந்தோஷமா இருக்கும்னா அது நடந்துட்டு போகட்டும். தயவுசெஞ்சு இத அம்மா கிட்ட சொல்லிடாதீங்க எப்பவுமே அவங்களுக்கு தெரியக்கூடாது என கூறுகிறார்.

அடுத்ததாக கோபி வீட்டுக்கு வரும் செழியன் எழிலுக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்து இருப்பதாக சொல்ல இனியா, கோபி, ராதிகா என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இன்னைக்கு சாயங்காலம் நிச்சயதார்த்தம் நாளைக்கு கல்யாணம் என சொன்னதும் இன்னும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

வேலையில்லாமல் இருக்கான் அதுக்குள்ள எதுக்கு அவனுக்கு கல்யாணம் என கோபி கேட்க செழியன் அந்த ப்ரொடியூசர் ஓட பொண்ணு எழில விரும்புறாங்க, இவனும் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று சொல்கிறான். அது பாட்டிக்கு பிடிக்கல அதனால அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து இந்த கல்யாணத்தை உடனே நடத்த முடிவெடுத்து இருக்காங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு ராதிகா கோபி எனக்கு என்னமோ சரியா தோணல என சொல்ல வர அதை சொல்லாமல் ஒன்னும் இல்ல என்ன மறைத்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.