பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா வெளியிட்டுள்ள கல்யாண வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழிலில் கல்யாணத்தை பாக்யா தடுத்து நிறுத்தி அமிர்தாவின் கழுத்தில் தாலி கட்ட வைத்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எழில் அமிர்தாவின் கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் கோபி வீட்டு பிரச்சனையை துவங்கி இருக்கும் நிலையில் நாங்க பார்த்ததெல்லாம் பொய்யா என கேள்வி எழுப்பும் அளவிற்கு அமிர்தா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது அமிர்தாவாக நடித்துவரும் ரித்திகா தமிழ்ச்செல்வி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் கல்யாணம் எப்படி நடந்தது என்பது குறித்த வீடியோவை தான் வெளியிட்டுள்ளார். உண்மையில் எழில் அவர் கழுத்தில் தாலி கட்டவில்லை.

தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு எழில் கட்டியது போல சீரியலில் காட்டியுள்ளனர். இது குறித்த வீடியோவை தான் அவர் வெளியிட்டுள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.