baakiyalakshimi serial radhika workout video
baakiyalakshimi serial radhika workout video

ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் மாமியாரை ராதிகாவின் அம்மா அவமானப்படுத்தி பேச அதனை அறிந்த பாக்யா ஈஸ்வரிக்கு வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார்.

மறுபக்கம் கோபி பாக்யாவை பழி வாங்குவது என கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அதில், உடல் வலிமையால் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.