பாக்கியலட்சுமி என்பது வெறும் திட்டமல்ல.அது ஒரு வீடு.. கடைசி நாள் சூட்டிங் கை கண்ணீருடன் பதிவாக வெளியிட்ட இனியா..!

Web Ads

கடைசி நாள் ஷூட்டிங் வீடியோ வெளியிட்டு கண்கலங்கியுள்ளார் இனியா.

baakiyalakshimi serial neha latest post viral
baakiyalakshimi serial neha latest post viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.தற்போது இந்த சீரியல் ஆகஸ்ட் முதல் வாரத்தோடு முடிவுக்கு வரப்போகிறது. இதனால் அதில் நடித்து வரும் சுசித்ரா, சதீஷ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு சொல்லி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இனியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நேகாவும் கடைசி நாள் ஷூட்டிங் எடுத்த வீடியோவை வெளியிட்ட கண்கலங்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ஆறு வருடங்கள். ஒரு குடும்பம். வாழ்நாள் முழுவதும் நினைவுகள் பாக்கியலட்சுமி வெறும் ஒரு திட்டமல்ல அது ஒரு வீடு முதல் டேக் முதல் கடைசி நிறைவு வரை நான் இங்கு வளர்ந்தேன் வாழ்ந்தேன் சிரித்தேன் அழுதேன்.

பிரியாவிடை சொல்வது ஒரு அற்புதம் போல் உணர்கிறது ஆனால் அவர்கள் சொல்வது போல் எல்லாம் நகர வேண்டும். நினைவுகள் மற்றும் அன்பால் நிறைந்த இதயத்துடன் நான் இனியாவாக விடைபெறுகிறேன்.. உங்கள் லட்டுவாக..கடைசியாக ஒரு முறை என்று தனது பதிவை முடித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் அந்த வீடியோவில் கடைசியாக அந்த வீட்டில் இருந்து கிளம்புவது போல முடித்துள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.