தமிழ் சினிமாவில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி இருந்த படம் 96. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, அதே சமயம் பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.
சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குனர் சேரன் ஆட்டோகிராப் வேறு, 96 வேறு இரண்டையும் ஒப்பிட வேண்டாம். இது மிக பெரிய பார்க்க வேண்டிய படம் என புகழ்ந்துள்ளார்.
தமிழ்சினிமாவின் மிகமுக்கியமான படம் 96.. ஆட்டோகிராப்பையும் 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம்..அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள்.இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்..
Hatsoff to premkumar..— Cheran Pandian (@cherandreams) October 7, 2018
விஜய் சேதுபதியும் திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார்… இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும்.
— Cheran Pandian (@cherandreams) October 7, 2018