AUSvIND India win
AUSvIND India win

AUSvIND India win – இந்தியா – ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 137 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளது.

இதற்கு முன்பாக நடைபெற்ற போட்டியில் 1-1 என்ற சமனில் இருந்த இரு அணிகளும் இந்த வெற்றியின் மூலம் 2-1 என்று இந்தியா முனனிலையில் உள்ளது.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்சில் 443-க்கு டிக்ளர் செய்தது, ஆஸ், அணி 151 ரன்களில் ஆல் அவுடானது.

அடுத்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்தியா தொடக்கம் முதலே சரியா ஆடவில்லை, விராட் 0 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடரந்து விக்கெட்கள் சரியவே இந்தியா அதிக ரன்கள் எடுக்கவில்லை. எனவே 106 ரன்களில் 8 விக்கெட் இழந்தது இந்தியா. அதனை தொடர்ந்து 106 ரன்கள் டிக்ளர் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து களமிறங்குய ஆஸ்., அணி 399 வெற்றி இலக்காக இருந்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்., அணி வீரர்களால் நமது இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

சிறப்பான பந்து வீச்சினால் ஆஸ்., அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்., அணி 8 விக்கெட் இழந்து 258 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று ஆட்டத்தை தொடர்ந்த இரு அணிகளுமே, ஆஸ்., வீரர் கம்மின்ஸ் 1 சிக்சர், 5 பவுண்டரிகள் என 114 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.

பும்ரா பந்தில் கம்மின்ஸ் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து லயனும் ஆட்டமிழந்தார். 89 ஓவரில் ஆஸ்., அணி ஆல் அவுடானது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பும்ரா, ஜடேஜா இருவரும் 3 விக்கெட்களை எடுத்தனர்.

சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி 137 ரன் வித்யாசத்தில் வரலாற்று வெற்றியை பதித்து உள்ளது.