Atlee Tweet

Atlee Tweet : இயக்குனர் அட்லீயை தகவல் ஒன்று பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவர் மனம் திறந்து தன்னுடைய ரசிகர்களிடமும் நண்பர்களிடம் உதவி கேட்டு டீவீட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ. இவரது இயக்கத்தில் இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல் என மூன்று படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த மூன்று படங்களுமே மெகா ஹிட்டாகி விட்டதை அடுத்து தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக தளபதி விஜயை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ ரசிகர்களிடமும் நண்பர்களிடமும் உதவி கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

அது என்னவென்றால் அவரது நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்த ஒருவரது குழந்தைகளுக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அந்த பிரச்சனையை சரி செய்ய அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அக்குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கோரிக்கை வைத்து ட்வீட் செய்துள்ளார்.