Athletics Championships
Athletics Championships

Athletics Championships – மும்பை மாரத்தானில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்த சுதா சிங், மற்றும் நிதேந்திர சிங் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.

மும்பை மாரத்தான் ஓட்டப்பந்தயம் மும்பையில் நேற்று நடந்தது.

இதில் பெண்கள் பிரிவில் எத்தியோப்பியா வீராங்கனை ஒர்க்னேஷ் அலெமு 2 மணி 25 நிமிடம் 45 வினாடிகளில் பந்த்ய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

அவருக்கு ரூ. 32 லட்சம் பரிசு தொகையாக கிடத்தது. இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய முன்னணி வீராங்கனை சுதா சிங் 2 மணி 34 நிமிடம் 56 வினாடிகளில்,

இலக்கை அடைந்து ஒட்டுமொத்தத்தில் 8-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் பெற்றார்.

தனிப்பட்ட முறையில் இது அவரது சிறந்த செயல்பாடாகும். இதன் மூலம் டோகாவில் செப்டம்பர் மாதம் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு சுதா சிங் தகுதி பெற்று உள்ளார்.

அதே சமயதில், ஆண்கள் பிரிவில் கென்யா வீரர் கஸ்மாஸ் லாகட் பந்தய தூரத்தை 2 மணி 9 நிமிடம் 15 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார்.

இந்திய அளவில் முதலாவதாக வந்த நிதேந்திர சிங் ரவாத் 2 மணி 15 நிமிடம் 52 வினாடியில் கடந்தார்.

இதனால் நிதேந்திர சிங் ரவாத் அவர்களும் உலக தடகள போட்டியில் கலந்துக்கொள்ள தகுதி பெற்று உள்ளார்.