Asuran First Look :

தனுஷின் அடுத்த படம் அசுரன் என்ற பெயரில் உருவாக உள்ளது. இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் நேற்று வெளியான மாரி 2 படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

மேலும் இந்த படத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தால் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.