Ashwin wishes Vijay for his Birthday : Thalapathy Vijay | Nayanthara | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

பிரபலங்கள் பலரும் அவரை டிவிட்டரில் வாழ்த்தி வருகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர் அஸ்வினும் ஒருவர்.

Ashwin wishes Vijay for his Birthday :

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டி அவரை கொண்டாடி வருகின்றனர். இதில் பெரும்பாலான போஸ்டர்களில் அவரை அரசியலுக்கு வரும்படி கேட்டு வருகிறார்கள்.

சூரரைப் போற்று படத்தில் மதுரை ரசிகர்களுக்கு இப்படியொரு ஸ்பெஷலா?

இது ஒருபக்கமிருக்க, நேற்று #HBDEminentVijay எனும் ஹேஷ்டாக் உலகளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்று அசத்தியது.

மேலும் பிரபலங்கள் பலரும் அவரை டிவிட்டரில் வாழ்த்தி வருகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர் அஸ்வினும் ஒருவர்.

தனது ட்விட்டரில் காலையில் ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தேன் அப்போது விஜயின் பிறந்தநாளும் சென்னை மழையும் மக்களை வெகுவாக மகிழ்விக்க காத்திருக்கிறது என்பதை அறிந்தேன்.

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், சென்னை மக்கள் மகிழ்ச்சியாக மழையை கொண்டாடுங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஒவ்வொரு ஆண்டும் அவர் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும். அந்தவகையில் இந்த ஆண்டு தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.