![Arun Vijay Interview Arun Vijay Interview](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2020/02/Arun-Vijay-Interview-696x392.jpg)
அருண் விஜய் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித், விஜய், ரஜினியை பற்றி பேசியுள்ளார்.
Arun Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் அருண் விஜய். சமீப காலமாக நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா என்ற படத்தில் நடித்துள்ளார்.
வெகுவிரைவில் இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் அருண் விஜய் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளை அளித்து வருகிறார்.
அப்படியான பேட்டி ஒன்றில் நடிகர்களை கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டு கூற வேண்டுமானால் யாரை யாருடன் சேர்த்து கூறுவீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அருண் விஜய், விஜய்னா விராட் கோலி, ரஜினினா சச்சின், அஜித்னா தோணி, கமல் கங்குலி என பேசியுள்ளார்.