லியோ படத்தில் தன்னுடைய கேரக்டர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் அர்ஜூன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

ஆயுத பூஜை விருந்தாக அக்டோபர் 19ஆம் தேதி வெளியிடவுள்ள இந்தப் படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், தாமஸ் மாதீவ், மிஷ்கின் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படம் பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். பெரிய நடிகர் விஜயுடன் இணைந்து நடிப்பது புதிதாக உள்ளது. லோகேஷ் என்னை மாறுபட்ட ஆக்சன் தோற்றத்தில் காட்டப் போகிறார் என தெரிவித்துள்ளார்.