
நாளை வெளியாக உள்ள அரியவன் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், திருச்சிற்றம்பலம் என தனுஷை வைத்து தொடர் ஹிட் படங்களை கொடுத்த மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் அரியவன்.

இந்தப் படத்தில் ஈசான் என்ற அறிமுக நடிகர் நாயகனாக நடிக்க பிரனாலி கோக்கரே நாயகி ஆக நடித்துள்ளார். மேலும் காமெடி நடிகர் சத்யன், சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்டவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க டானியல் பாலாஜி மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார்.
படத்தின் கதைக்களம் : இளம் பெண்களை குறி வைத்து அவர்களை காதலிப்பதாக சொல்லி அவர்களை ஏமாற்றி ஆபாச முறையில் வீடியோக்களை எடுத்து அதை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறது ஒரு கும்பல். இந்த கும்பலில் நாயகியின் தோழியும் சிக்கிக் கொள்கிறார்.
இதனால் படத்தின் நாயகன் ஈஷா தனது காதலியை தோழி மட்டுமல்லாமல் அனைவரையும் இதிலிருந்து மீட்க போராடுகிறார். இதனால் ஹீரோவுக்கும் இந்த கும்பலின் தலைவனான டேனியல் பாலாஜிக்கும் இடையே மோதல் உருவாகிறது. இதனால் அடுத்து நடந்தது என்ன இந்த மோதலில் வெற்றி பெற்றது யார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

அறிமுக நடிகர் ஈஷான் இது தனக்கு முதல் படம் என சொல்ல முடியாத அளவுக்கு திறமையான நடிப்பை கொடுத்துள்ளார். விஜயகாந்த் பிறகு ஃபுட் மொமெண்ட்டுகளை பயன்படுத்திய ஹீரோ ஈஷா தான் என சொல்லலாம். ஆக்சன் காட்சிகளில் அதிரடியான நடிப்பை கொடுத்துள்ளார்.
நாயகி பிரனாலி கோக்கரே அழகான நடிப்பை கொடுத்துள்ளார். ஹீரோவுக்கும் அவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அழகாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படத்தில் நடித்துள்ள அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை செவ்வனே செய்துள்ளனர். வில்லனாக டேனியல் பாலாஜி மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.
விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக ஜேம்ஸ் வசந்தின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது, காட்சிகளுக்கு ஏற்றார் பல இசையால் படத்திற்கு இன்னும் கூடுதல் அழகை சேர்த்துள்ளார்.
இயக்குனர் மித்ரன் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வர வேண்டும் என்பது குறித்தும் இந்த படத்தில் பேசியுள்ளது சிறப்பு.