விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு தாவ உள்ளார் பிரபல தொகுப்பாளினி.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா. அதுமட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். மேலும் வெள்ளித் திரையிலும் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு தாவும் பிரபல தொகுப்பாளினி - விஷயம் என்ன??

மேலும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று அதன் பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார்.

விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு தாவும் பிரபல தொகுப்பாளினி - விஷயம் என்ன??

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவ இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது வெகு விரைவில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியின் புதிய சீசன் ஒளிபரப்பாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் ஜீ தமிழில் தன்னுடைய மகளுடன் அர்ச்சனா என்ட்ரி கொடுக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இனி இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தொடர்வாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.