பிரம்மாண்ட பட இயக்குனரான மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கதையில் நடிக்காததை பற்றி அரவிந்த்சாமி அளித்துள்ள பேட்டி வைரல் ஆகியுள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்காததை பற்றி அரவிந்த்சாமி அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர், மணிரத்தினம் அவர்களுடன் நடிப்பதற்கு பொன்னியின் செல்வன் மட்டுமல்ல அவர் எப்ப கூப்பிட்டாலும் நடிக்கிறதுக்கு ஆசைதான், ஆனா என்ன அவரு இந்த படத்துல நடிக்கிறதுக்கு கூப்பிடல, அதுக்கு அப்புறம் நான் போய் ரோல் இருக்கான்னு கேட்கிற அளவுக்கு ரிலேஷன்ஷிப் எல்லாம் எங்களுக்குள்ள கிடையாது. எனக்கு தெரியும் அவருக்கு ஏதாவது இருந்துச்சுன்னா எனக்கு பிடிக்கிற மாதிரி இருந்துச்சுன்னா இல்ல எந்த கேரக்டர்ஸ் யார் நடிச்ச நல்லா இருப்பாங்கன்னு அவரு யோசிச்சு இருப்பார். ஏன் என்ன தேர்வு செய்யலன்னு கேட்க முடியாது. என்று அப்பேட்டியில் கூறியுள்ளார்.

https://youtube.com/shorts/jiNMiPVwHtE?feature=share