
நடிகர் அரவிந்த் சாமியின் உண்மையான அப்பா யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. 90களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்த இவருக்கு அதன் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதை எடுத்து தற்போது மீண்டும் படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்திர வேடம் என தொடர்ந்து கலக்கி வருகிறார்.

இப்படியான நிலையில் அரவிந்த் சாமியின் உண்மையான பெற்றோர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ரஜினியுடன் இணைந்து சில படங்களிலும் சின்னத்திரையில் மெட்டி ஒலி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் டெல்லி குமார்.
இவர் தான் அரவிந்த் சாமியின் உண்மையான அப்பா என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறு வயதிலேயே அரவிந்த் சாமியை தன்னுடைய சொந்த அக்காவிற்கு தத்து கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சந்தித்துக் கொள்வோம் அரவிந்த்சாமி அவ்வபோது தன்னை பார்க்க வருவார் என தெரிவித்துள்ளார்.
இருவரும் ஏன் சேர்ந்து நடிக்கவில்லை என கேட்டதற்கு அதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை என தெரிவித்துள்ளார். ஒருவேளை வாய்ப்பு அமைந்தால் இணைந்து நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
