நான் கண்டிப்பா விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என ஓப்பனாக பேசியுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியின் தொடங்கி அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ள விஜய் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என தெரிவித்தார்.

விஜயின் அரசியல் என்று தமிழ் சினிமாவிற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என பலரும் கூறி வருகின்றனர். அதே சமயம் தளபதி விஜய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

இந்த நிலையில் நடிகர் அரவிந்த்சாமி விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதாவது, நான் ரஜினி, கமல் சாரோட பெரிய ஃபேன். விஜயை எனக்கு பிடிக்கும். ஆனாலும் அவர்களுக்கு நான் ஓட்டு போட மாட்டேன், போடவும் கூடாது என பேசியுள்ளார். 

மேலும் இதற்கான காரணம் குறித்து கூறியதாவது, அவர்கள் சொல்லும் விஷயத்தில் எதாவது மாற்றம் வர போகிறதா, அவர்களால் முடியுமா? என்பதை அறிய வேண்டும். அவர்களது நோக்கம் எனக்கு பிடிக்க வேண்டும். ஒரு நடிகர், நல்ல அரசாங்கத்தை உருவாக்கும் தகுதி இருக்கிறது என எப்படி நம்புறது என அரவிந்த் சாமி பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.