நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைதள பக்கத்தில் அரபிக் குத்து பாடலின் எக்ஸ்ட்ரா வீடியோவை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரை துறையை சார்ந்த இவர் புட்ட பொம்மா என்னும் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இதில் அனிருத் இசை அமைப்பில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படத்தில் இடம் பெற்றிருந்த அரபிக் குத்து பாடல் வெளியாகி தற்போது 1 வருடத்தை கடந்திருக்கும் நிலையிலும் யூடியூபில் 500 மில்லியன் மேலாக பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்பாடல் ஒரு வருடத்தை நிறைவடைந்து இருக்கும் தருணத்தை நடிகை பூஜா ஹெக்டே இப்பாடலில் இடம்பெறாத நடனக்காட்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்தக் காட்சி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.