மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

Web Ads

மதராஸி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் முருகதாஸ்.

ar murugadoss about madharasi movie secret
ar murugadoss about madharasi movie secret

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் மதராசி படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தது என்ற தகவலை சொல்லி உள்ளார் முருகதாஸ்.

அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் இந்த கதையை கூறியதாகவும், பாதி கதையைக் கேட்டு சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் சொல்லியிருந்தார். ஆனால் மீண்டும் அவரிடம் கேட்டபோது அவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லாததால் சிவகார்த்திகேயனிடம் கதையை சொன்னேன் என்று கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ar murugadoss about madharasi movie secret
ar murugadoss about madharasi movie secret