வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் அப்பத்தான் பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் சிங்கிள் பாடலான “அப்பத்தா” பாடல் நவம்பர் 14ம் தேதியான நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகி உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் வடிவேலுவின் குரலில் உருவாகியுள்ள இப்பாடல் தற்போது வரை 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக லைக்கா நிறுவனம் twitter பதிவின் மூலம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.