நடிகை அபர்ணா பாலமுரளி சமீபத்தில் அளிக்கப்பட்ட பேட்டியில் முன்னணி நடிகர்களை எடுத்துக்காட்டாக பேசி இருக்கிறார். அந்த அதிரடியான பேட்டி வைரல் ஆக்கியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர்தான் அபர்ணா பாலமுரளி. இவர் தமிழில் சூர்யாவின் சூரரைப் போற்று என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை கொடுத்த அபர்ணா பாலமுரளி இதற்காக தேசிய விருதுநையும் பெற்றிருக்கிறார். இப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் இதனை தொடர்ந்து வீட்ல விசேஷம் என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இவர் ஆகாசம், நித்தம் ஒரு வானம், சுந்தரி கார்டன்ஸ், பத்மினி, கப்பா, உலா, இனி உத்தரம், உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துவருகிறார்.

தற்பொழுது பிஸியான நடிகையாக மாறி இருக்கும் இவர் சமீபத்தில் எடுத்த பேட்டியில் உடல் பருமனை பற்றி முன்னணி நடிகர்களை எடுத்துக்காட்டாக வைத்து அதிரடியாக பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், ” என்னிடம் முதலில் யாராவது நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். இப்போது அதயெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எடை கூடுவதற்கு உடல் பிரச்சினைகளும் காரணமாக இருக்கிறது. ஒல்லியாக இருக்கும் நடிகைகளை மட்டுமே நாயகியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்கு புரியவில்லை.

தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் பிரபலத்திற்கும் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை. திறமைதான் முதலில் முக்கியம். ஆனால், நடிகைகள் என்று வரும்போது உடல் தோற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்” என்று அதிரடியாக பேசியுள்ளார். இவரது இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி உள்ளது.