விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் நடிக்கும் பவித்ராவிற்கு அனுஷ்கா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் TRP ரேட்டிங்கில் டாப் இடத்தில் இருக்கும் பிரபல சீரியலான “தென்றல் வந்து என்னை தொடும்” என்ற மெகாதொடர் தினமும் மதிய வேளையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் வினோத் மற்றும் ஹீரோயினாக நடிகை பவித்ரா நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளும் கொண்டுள்ள இந்த சீரியல் அதிகப்படியான ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் உடன் ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருகிறது.

இந்நிலையில் திரை துறையில் டாப் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பாகுபலி படத்தின் தேவசேனாவாகிய அனுஷ்கா இத்தொடரின் கதாநாயகியாக நடித்து வரும் பவித்ராவிற்கு போன் கால் மூலம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அதில் அவர் பவித்ராவிடம் தான் இந்த சீரியலில் நிறைய எபிசோடுகளை பார்த்துள்ளதாகவும், சீரியல் மிகவும் நன்றாக இருப்பதாக கூறி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதனால் சீரியல் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக நாயகி பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதற்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.