Anushka

Anushka Gallery : நடிகை அனுஷ்கா உடல் எடையை குறைத்த பிறகு தற்போது முதல் முறையாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. தமிழில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, ரஜினி என அனைத்து நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டார்.

திறமையான நடிகையான இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கூட்டி இருந்தார். அதன் பின்னர் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

பாகுபலி படத்திற்கு கூட அனுஷ்காவை ஸ்லிம்மாக காட்டவே பல கோடி செலவழிக்கப்பட்டது. இதனையடுத்து வெளிநாடுகளில் எல்லாம் சென்று சிகிச்சை பெற்று தற்போது தன்னுடைய உடல் எடையை ஓரளவிற்கு குறைத்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் ராஜமௌலி மகன் திருமணத்திற்காக ஹைதராபாத் வந்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் அனுஷ்கா ஓரளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ

Anushka Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.